டெல்லியை கலக்கும் குரங்கு மனிதனும், நிஜ குரங்குகளும்
டெல்லி:
குரங்கு மனிதன் என்ற போர்வையில் யாரோ ஒருவன் கடந்த 10 நாட்களாக டெல்லியைத் தூங்கவிடாமல் இம்சித்துவந்த போதிலும், டெல்லி மக்களுக்குக் குரங்குகள் புதிதல்ல!
கடந்த பல ஆண்டுகளாக டெல்லி மக்கள் குரங்குத் தொல்லைகளை அனுபவித்துதான் வருகிறார்கள்.
டெல்லியில் உள்ள பல அடுக்கு மாடிகளில் ஆயிரக்கணக்கான குரங்குகள் இப்போதும் எப்போதும் வலம் வந்துகொண்டுதான் இருக்கின்றன.
தெருக்களில் போவோர், வருவோரை நோக்கித் திடீரெனப் பாயும். வீடுகள் திறந்து கிடந்தால் போதும்! படுஜாலியாகி, வீட்டினுள் புகுந்து எல்லா ஜாமான்களையும் உருட்டி எடுத்துவிடும். "குரங்கு கையில் கிடைத்த பூமாலைமாதிரி" என்று சும்மாவா சொன்னார்கள்?!
என்னதான் ஜன்னல் கதவுகளைப் பூட்டிவைத்தாலும் சரி, சில ஜன்னல்களின் வழியே எளிதாக நுழைந்து,சமையலறைக்குள் புகுந்துவிடும். பிரிட்ஜைத் திறந்து, வாழைப்பழத்தை எடுத்துக் கொண்டு, படுக்கையில் ஹாயாகஉட்கார்ந்து தோலுரித்துச் சாப்பிடுமாம்.
விஐபியின் இருப்பிடங்களையும் குரங்குகள் விட்டுவைக்கவில்லை. ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகம்மற்றும் பல அமைச்சர்களின் அலுவலகங்களிலும் சுமார் 2,000 குரங்குகள் வளைய வருகின்றன. இந்தஅலுவலகங்களில் உள்ள முக்கிய ஆவணங்களைக் குரங்குகளிடமிருந்து காக்கும் பொருட்டு, வருடத்தில்பெரும்பாலான நேரங்களில் இந்த அலுவலகத்தின் ஜன்னல் கதவுகள் மூடியே கிடக்குமாம்.
குரங்கு மனிதனின் தாக்குதலுக்கு மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு 50 பேர் ஆளாகியிருப்பார்களா? ஆனால் இந்தக்குரங்குகள் தினமும் நூற்றுக்கணக்கானவர்களை விரட்டிக் கொண்டிருக்கின்றனவே! அரசிடம் எத்தனையோ புகார்மனுக்களைக் கொடுத்தும், ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படுகிற மாதிரி தெரியவில்லை என்று டெல்லி மக்கள்புலம்புகின்றனர்.
குரங்குகள் தங்கியிருந்த காடுகளை அழித்து மனிதன் வீடுகளைக் கட்டினால், அவை எங்கேதான் போகும்?அதான் அவைபாட்டுக்கு எல்லாருடைய வீடுகளுக்கும் படையெடுத்துக் கொண்டிருக்கின்றன. இப்போது அவற்றைவிரட்டுங்கள் என்று சொல்வது எந்தவிதத்தில் நியாயம்? என்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் கேட்கிறார்கள்.நியாயம்தானே?
""குரங்குகளை தெய்வமாக மதிப்பவர்கள்தானே நாம். ராமாயணத்தில் அனுமனாக வரும் குரங்கைத் தெய்வமாகப்போற்றி வணங்குகிறோம். அதைவிட, நம்முடைய மூத்த பரம்பரையினர்தானே இந்தக் குரங்கார்கள்.அவைபாட்டுக்கு வந்துட்டு, போய்ட்டு இருக்கட்டுமே"" என்று இந்து மதவாதிகள் குரங்குகளுக்குப் பரிந்துபேசுகின்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications