ஜெ. முதல்வராக மொட்டை போட்ட அதிமுகவினர்
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்:
ஜெயலலிதா வெற்றி பெற வேண்டிக் கொண்ட 25 அதிமுகவினர் தங்கள் குழந்தைகளுடன் மொட்டை போட்டுக்கொண்டனர்.
நாமக்கல்லில் பலப்பட்டறை என்ற இடத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது. தேர்தலுக்கு முன்பு இந்தக்கோயிலில் அதிமுகவினர் சென்று வேண்டுதல் விடுத்தனர். "அம்மா ஆட்சிக்கு வந்தால் மொட்டை போட்டுக்கொள்வதாகக் கூறி வேண்டியிருந்தனர்.
இந்நிலையில், அதிமுக "அமோக வெற்றியுடன் ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து அதிமுகவினர்வேண்டுதலின்படி மொட்டை போட்டுக் கொண்டனர்.
இதில் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த 7, 8 வயது சிறுவன் சிறுமியருக்கும் மொட்டை போட்டனர். 25 பேர் இந்தமொட்டையை ஒரே சமயத்தில் போட்டுக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications