மாறன் கூட்டாளிக்கு 2 ஆண்டு கடுங்காவல்
தர்மபுரி:
தமிழ்நாடு விடுதலைப் படையைச் சேர்ந்த பொன்னிவளவனுக்கு வெடிமருந்து பதுக்கல் வழக்கில் இரண்டுஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தமிழ்நாடு விடுதலைப் படை என்ற அமைப்பை மாறன் ஏற்படுத்தினார். இந்த அமைப்பு பல்வேறு தீவிரவாதச்செயல்கள் மற்றும் கொள்கைகளில் ஈடுபட்டுள்ளது.
இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் நடந்து வருகிறது. சந்தனக்கடத்தல் வீரப்பனுடன் கூட்டாளியாகசெயல்பட்டு வந்தார் மாறன். கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திச் சென்றபோது அவர்கள் வைத்தகோரிக்கைகளில் ஒன்று விடுதலைப் படையைச் சேர்ந்த 5 தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்பது தான்.
இந்த 5 பேரில் பொன்னிவளவனும் ஒருவர். சேலம் சிறையில் இருந்து வந்த பொன்னிவளவனுக்கு தர்மபுரிநீதிமன்றத்திலும், பிற நீதிமன்றங்களிலும் வழக்குகள் உள்ளது.
கடந்த 97ம் ஆண்டு ஆண்டிமடம் போலீஸ் ஸ்டேஷன் மீது நடத்திய தாக்குதல், 98ம் ஆண்டு ஜெயங்கொண்டத்தில்நகைக் கடை கொள்ளை, 99 ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை முன்பு குண்டு வெடிப்பு ஆகிய சம்பவங்களிலும்பொன்னிவளவன் தொடர்புடையதாக வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் கொளத்தூர் ஏரிக்கரையில் வெடிமருந்து பதுக்கி வைத்திருந்த வழக்கு தொடர்பாக அவர் கைதுசெய்யப்பட்டார்.
இந்த வழக்கு தர்மபுரி இரண்டாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குணவதி,வெடிமருந்து பதுக்கல் வழக்கில் பொன்னிவளவனுக்கு இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்துதீர்ப்பளித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications