ஜெ. படம் மாட்ட விரும்பாத பேரூராட்சித் தலைவர் ராஜினாமா
கோவை:
முதல்வர் ஜெயலலிதா படத்தின் கீழ் அமர்ந்து பணியாற்ற விரும்பாத பேரூராட்சித் தலைவர் ராஜினாமா செய்துகடிதம் எழுதியுள்ளார்.
திருப்பூர் அருகே உள்ள 15 வேலம்பாளையம் பேரூராட்சித் தலைவராக இருப்பவர் (பொறுப்பு) ப.பெரியசாமி.இவர் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஊராட்சித் தலைவரானார்.
இவரது அறையில் முதல்வராக இருந்த காலத்தில் கருணாநிதியின் படம் மாட்டப்பட்டிருக்கும். இப்போதுமுதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இந்த நிலையில் பேரூராட்சி அலுவலகத்திற்குள் புகுந்துஅதிமுகவினர் படத்தை மாற்றக் கோரினர்.
ஆனால், பேரூராட்சித் தலைவர், மற்ற உறுப்பினர்களைக் கேட்டுத்தான் படம் மாற்றவேண்டும் எனவலியுறுத்தியுள்ளார். அதிமுகவினரோ, பிடிவாதமாக கருணாநிதியின் படத்தை அகற்றி விட்டு முதல்வர் ஜெயலலிதாபடத்தை மாட்டியுள்ளார்.
இதைக் கண்டித்து பேரூராட்சித் தலைவர் பெரியசாமி அலுவலகத்தை விட்டு வெளியேறினார். ஜெ, படத்தின் கீழ்தான் பணியாற்ற விரும்பவில்லை எனக் கூறி, அதனை அகற்ற வேண்டும் என பிடிவாதமாக இருந்தார். ஆனால்,ஐந்து நாட்களாகியும் படம் அகற்றப்படமால் இருந்தது. இதைக் கண்ட பெரியசாமி, மீண்டும் அலுவலகத்திற்குள்நுழையாமல் ராஜினாமா கடிதம் எழுதி வைத்து விட்டுச் சென்று விட்டார்.
இது குறித்து பெரியசாமி கூறுகையில், லஞ்ச ஒழிப்புக்காக நான் இயக்கம் நடத்தி வருகிறேன். லஞ்ச ஊழலில்தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா படத்தின் கீழ் அமர்ந்து நான் அலுவல் பார்க்க விரும்பவில்லை. அராஜகம் தொடங்கிவிட்டது என்பதற்கு இது உதாரணம். பரிதி இளம் வழுதி தாக்கப்பட்டதைக் கண்டித்தும் நான் ராஜினமாசெய்கிறேன் என்றார் அவர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications