பாண்டி. முதல்வராக ப.சண்முகம் இன்று பதவியேற்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாண்டிச்சேரி முதல்வராக ப.சண்முகம் வியாழக்கிழமை காலை 11.50 மணிக்கு பதவியேற்கிறார்.
காங்கிரஸ் தலைமையில் அமையவுள்ள கூட்டணி அரசின் முதல்வராக ப.சண்முகத்தை காங்கிரஸ் மேலிடம்தேர்வு செய்துள்ளது. ப.சண்முகம் தற்போது எம்.எல்.ஏவாக இல்லாதவர். இந்த நிலையில், வியாழக்கிழமை அவர்முதல்வராகப் பதவியேற்கிறார்.
ஆளுநர் மாளிகையான ராஜ் நிவாஸில் துணை நிலை ஆளுநர் ரஜினி ராய், ப.சண்முகத்திற்கு முதல்வராகபதவிப் பிரமாணம் மற்றும் ரகசியக் காப்புப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
அமைச்சர்கள் யாரும் இப்போது பதவியேற்க மாட்டார்கள். சோனியா காந்தியின் பரிசீலனைக்குப் பிறகுஅமைச்சர்களது பெயர்கள் அறிவிக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications