வந்துவிட்டது "ஹாக்ஸ் ஐ": எல்பிடபிள்யூவைத் துல்லியமாகக் கணிக்கும் கருவி

Subscribe to Oneindia Tamil

கிரிக்கெட் விளையாட்டில் எல்பிடபிள்யூ அவுட் என்றாலே அம்பயர்களுக்கு எரிச்சல் வந்துவிடும். பல ஆட்டங்களில் எல்பிடபிள்யூ என்று சொல்லிமட்டையாளர்களைப் பெவிலியனுக்கு அனுப்பிவிடுவார்கள் அம்பயர்கள். இதனால் அம்பயர்கள் எப்போதும் விமரிசனத்திற்கு ஆளாகிக் கொண்டேஇருப்பார்கள்.

இத்தகைய விமரிசனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு புதிய கருவி வந்து விட்டது. இந்தக் கருவிக்கு "ஹாக்ஸ் ஐ" (ஏச்தீடுண் உதூஞு) என்றுபெயர். எல்பிடபிள்யூ அவுட்டுகளை மிகவும் துல்லியமாகத் தெரிவிக்கும் இந்தக் கருவியைக் கண்டுபிடித்தவர்பெயர் பால் ஹாக்கின்ஸ்.

தனது முதல்கட்டப் பணியாக ஆடுகளம், மைதானம், பந்து மற்றும் பந்து செல்லும் திசை ஆகிய அனைத்தையும்"டிஜிட்டல்" முறையில் பதிவு செய்து கொள்கிறது இந்த "ஹாக்ஸ் ஐ". பின்னர் நமக்குத் தேவைப்படும்போது, இந்தக்கருவியை இயக்கி, பந்தின் திசையைத் தெரிந்து கொள்ளலாம்.

பந்து செல்லும் திசையிலேயே சென்று, மட்டையாளரின் கால்காப்பில் பந்து பட்ட திசையைத் தெளிவாக "ஹாக்ஸ் ஐ"காட்டிவிடும். கால்காப்பில் பந்து படாமல் இருந்தால், அது உண்மையிலேயே ஸ்டம்புகளில் பட்டிருக்குமாஎன்பதைத் துல்லியமாக இக்கருவி தெரிவித்துவிடும்.

ஏவுகணைத் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள "ஹாக்ஸ் ஐ"-யில்கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்ட 6 காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்தக் கருவியைப் பயன்படுத்துவதில் 1 மில்லிமீட்டர் தவறு ஏற்படுவதற்குக் கூட வாய்ப்பில்லை. இக்கருவியின்செயல்பாட்டை கிரிக்கெட் ரசிகர்களும் பார்க்க முடியும்.

ஆனாலும், இந்தக் கருவியைப் பயன்படுத்துவதைப் பல அம்பயர்கள் எதிர்க்கின்றனர். மட்டையாளர்களின்அவுட்டுகளைத் தீர்மானிக்கும் தங்களுடைய ஏகாதிபத்தியம், இந்த "ஹாக்ஸ் ஐ"-யால் பறி போய்விடும் என்றுஅஞ்சுகிறார்கள்.

இக்கருவியைப் பயன்படுத்துவது பற்றி ஜூன் மாதம் லார்ட்ஸில் கூடும் சர்வதேசக் கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில்முடிவு செய்யப்படும் என்று கவுன்சில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத பால் ஹாக்கின்ஸ், தற்போதுள்ள கருவிகளைவிட "ஹாக்ஸ் ஐ" சிறப்பானதுஎன்று மட்டும் இப்போதைக்குக் கூறமுடியும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+