முஷாரப்புக்கு இந்தியா அழைப்பு: பாக். கட்சிகள் வரவேற்பு
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் முஷாரப்புக்குஇந்தியாவிடமிருந்து அழைப்பு வந்திருப்பதை பாகிஸ்தானில் உள்ள முக்கியக் கட்சிகள்வரவேற்றுள்ளன.
இந்த வரவேற்பை ஏற்று முஷாரப் டெல்லிக்குப் போவதற்கு முன்னர், அவர்தங்களுடனும் பேச்சு நடத்த வேண்டும் என்று அக்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
பாகிஸ்தான் மக்கள் கட்சி, அவாமி தேசியக் கட்சி, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் போன்றபாகிஸ்தானின் முக்கிய கட்சிகளும் மற்றும் சில மதவாத அமைப்புகளும் இந்தப் பேச்சுவார்த்தையை வரவேற்றுள்ளன.
இந்தப் பேச்சுவார்த்தை மூலம், கடந்த 50 ஆண்டுகளாகத் தொடர்ந்து நீடித்து வரும்காஷ்மீர் எல்லைப் பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவைகள்கூறியுள்ளன.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications