அரிசி கையிருப்பு: வெள்ளை அறிக்கை கேட்கிறது திமுக
சென்னை:
அரிசி கையிருப்பு பற்றி தமிழக அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று திமுகவற்புறுத்தியுள்ளது.
இதுகுறித்து திமுக பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான ஆற்காடு வீராசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
ரூ.1,000 கோடிக்கு களஞ்சியத்தில் தானியம் வைத்திருப்பதாகக் கருணாநிதி கூறியதைப் பொய் என்று ஜெயலலிதாகூறியுள்ளார்.
ஆனால், இன்று தமிழக அரசின் கிடங்குகளில் அரிசியாக இருப்பது 5,30,000 டன். மேலும், 19,30,000 டன்நெல்லாக இருக்கிறது.
நெல்லுக்குள் அரிசி இருக்கிற ரகசியம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். அந்த நெல்லை அரிசியாக அரைத்தால்சுமார் 9 லட்சம் டன்னுக்கும் அதிகமாக அரிசி கிடைக்கும்.
ஆக மொத்த அரிசி கையிருப்பு 14 லட்சம் டன்னுக்கும் அதிகமாகவே இருக்கும். இதன் மொத்த கொள்முதல் விலைரூ.1,000 கோடியைத் தாண்டும்.
இதைத்தான் கருணாநிதி 2 நாட்களுக்கு முன்னர் சொன்னார். ஆனால் அது பொய்யான தகவல் என்று முதல்வர்ஜெயலலிதா கூறியுள்ளார்.
தமிழக அரசின் சமீபகால நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையைத் தாக்கல் செய்வோம் என்று கூறியுள்ளார்முதல்வர். அத்துடன், அரிசி கையிருப்பு குறித்த வெள்ளை அறிக்கை ஒன்றையும் தாக்கல் செய்ய வேண்டும் என்றுஅறிக்கையில் கூறியுள்ளார் ஆற்காடு வீராசாமி.
கருணாநிதி சொல்வது பொய்: ஜெ.
முன்னதாக, "அரிசி கையிருப்பு பற்றி கருணாநிதி சொல்வது உண்மையல்ல. 1996ஆம் ஆண்டு நாங்கள் ஆட்சியைவிட்டு இறங்கிய போது ரூ.874 கோடி ரொக்க இருப்பு வைத்துவிட்டுச் சென்றோம். எல்லாவற்றையும்ஊதாரித்தனமாக செலவு செய்துவிட்ட திமுக அரசு, ரூ.700 கோடி நிதிப் பற்றாக் குறை வைத்துவிட்டுச் சென்றுள்ளது.நிதிநிலை பற்றி மக்கள் தெரிந்து கொள்வதற்காக வெள்ளை அறிக்கை ஒன்றை நாங்கள் தாக்கல் செய்வோம்" என்றுமுதல்வர் ஜெயலலிதா கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications