• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடவடிக்கை

By Staff
|

திருச்சி:

தமிழகத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும்மேற்கொள்ளப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் வெங்கடாச்சலம் தெரிவித்தார்.

திருச்சியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்குசுற்றுலாத்துறை மிகவும் அவசயமானதாகும்.

சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக மாநில அர சுபல்வேறு நலத் திட்டங்களைஅறிமுகப்படுத்தவுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.

சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான வழி வகைகள், திட்டங்கள் குறித்து மாவட்டவாரியாக கலெக்டர்கள் மற்றும் பிற அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தத்திட்டமிட்டுள்ளேன் என்றார் வெங்கடாச்சலம்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X