அறுவை சிகிச்சைக்குப்பிறகு வாஜ்பாய் குணமடைய 6 வாரங்கள்
நியூயார்க்:
அறுவை சிகிச்சை முடிந்தபின் பிரதமர் வாஜ்பாய் குறைந்தது 6 வாரங்களுக்குப் பிறகுதான் பூரண குணமடையமுடியும் என்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்யவுள்ள நியூயார்க் டாக்டர் சித்தரஞ்சன் ரனவதே சனிக்கிழமைகூறினார்.
நியூயார்க்கில் உள்ள லெனாக்ஸ் மருத்துவமனையில் டாக்டர் சித்தரஞ்சன் கூறுகையில், ஏற்கனவே இந்திய பிரதமர்வாஜ்பாய்க்கு இடது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இப்போது வலது காலிலும் அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது. இந்த முறை அறுவை சிகிச்சை நடந்துமுடிந்ததும் பிரதமர் வாஜ்பாய் குறைந்தது 6 வாரங்களாவது ஓய்வில் இருக்க வேண்டும். அறுவை சிகிச்சைக்குப்பிறகு பிரதமர் வாஜ்பாய் ஆறு வாரங்கள் ஓய்வு எடுத்தால்தான் பூரண குணமடைய முடியும்.
எனது டாக்டர்கள் குழு முழுவதையும் வாஜ்பாய்க்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக டெல்லிக்கு அழைத்துக்கொண்டு செல்லவுள்ளேன். மேலும் பிரதமரின் உடல் எடை மற்றும் வயது ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டு அதிக சிரத்தையுடன் அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது.
அறுவை சிகிச்சை நடந்து முடிந்து சில தினங்களில் வாஜ்பாய் எழுந்து நடமாடலாம். ஆனால் ஒரு மாதம் அல்லதுஆறு வாரங்கள் வாஜ்பாய் அலுவலகப் பணிகள் எதிலும் ஈடுபடக் கூடாது என்றார்.
முன்னதாக, ஜூன் முதல் வாரத்தில் வலது காலில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளப் போவதாக பிரதமர்வாஜ்பாய் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
ஏற்கனவே, கடந்த அக்டோபர் மாதம் மும்பை ப்ரீச் கேன்டி மருத்துவமனையில் பிரதமர் வாஜ்பாய்க்கு இடது காலில்அறுவை சிகிச்சை நடந்தது. அப்போதே வலது காலிலும் வலி இருந்தது. ஆனால் உடனடியாக வலது காலில்அறுவை சிகிச்சை செய்யக் கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கை செய்ததால் உடனடியாக அவருக்கு வலதுகாலில் அறுவை சிகிச்சை நடக்கவில்லை.
ஐ.ஏ.என்.எஸ்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications