குஜராத்தில் நாளை கரையை கடக்கிறது புயல்
காந்திநகர்:
கடந்த 4 நாட்களாக மிரட்டிக் கொண்டிருக்கும் புயல் குஜராத்தின் நாலியா மற்றும் வெராவால் பகுதிகளுக்கிடையேசெவ்வாய்க்கிழமை காலை கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புயலின் தீவிரம் அதிகரித்துக் கொண்டே வருவதாக வானிலை நிறுவனம் கூறுகிறது. புயல் கரையைக் கடக்கும்போது, மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகம் வரை பலத்த காற்று வீசும். அத்துடன் கடும் மழையும்பெய்யக்கூடும் என்றும் வானிலை நிறுவனம் எச்சரித்துள்ளது.
சனிக்கிழமையே புயல் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் புயல் சின்னம் மிக மிகமெதுவாகவே வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
கட்ச், ஜாம்நகர், போர்பந்தர், ஜூனாகத் மற்றும் டையூ ஆகிய பகுதிகளில்தான் நேரடியாகப் புயல் தாக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
ராணுவம், விமானப்படை, கடற்படையைச் சேர்ந்த அனைத்து வாகனங்களும் தயார் நிலையில்வைக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படும் பொருட்டு,எச்சரிக்கைக் கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன.
புயலின் திசை மாறலாம்?
புயலின் வேகம் குறைந்து கொண்டு வருவதால், அது செல்லும் திசையும் சிறிது சிறிதாக மாறிக் கொண்டேவருகிறது. வடக்குப் பக்கம் அது நகர்ந்து கொண்டே செல்வதால், இப்புயலில் இருந்து குஜராத் தப்பிப்பதற்கானவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளைப் புயல் தாக்கக்கூடும் என்றும்அஞ்சப்படுகிறது.
யு.என்.ஐ. - ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications