வாஜ்பாய்க்கு ஜூன் 8 ம் தேதி அறுவை சிகிச்சை
மும்பை:
பிரதமர் வாஜ்பாயின் வலதுகால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்காக மும்பையின் ப்ரீச் காண்டி மருத்துவமனைமுழு வீச்சில் தயாராகி வருகிறது.
பிரதமர் வாஜ்பாய்க்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் தேதி இடதுகாலில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைமும்பை ப்ரீச் காண்டி மருத்துவமனையில் அமெரிக்க மூட்டு அறுவை சிகிச்சை நிபுணரான சித்தரஞ்ஜன் தாஸ்ரணவத் அவர்களால் நடத்தப்பட்டது.
அப்போது அவருக்கு வலது காலில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தேவையில்லை என கூறப்பட்டது. ஆனால்வாஜ்பாய் வலது மூட்டிலும் தொடர்ந்து வலி இருப்பதாக கூறியதால் அவருக்கு அடுத்த மாதம் வலது மூட்டிலும்மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மூட்டு மாற்று அறுவை சிகிச்சையையும் சித்தரஞ்சன்தாஸ் தான் செய்யவிருக்கிறார். இதற்காக அவர் அடுத்தமாதம் அமெரிக்காவிலிருந்து இந்தியா வருகிறார்.
வாஜ்பாய் ஆஸ்டியோ -ஆர்தரிடீஸ் என அழைக்கப்படும் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகிறார். இது முதுமைகாரணமாக வரும் மூட்டுவலியாகும்.
இந்த வியாதியின் போது காலின் கீழ் பகுதிக்கும், தொடைபகுதிக்கும் இடையே இருக்கும் பஞ்சு போன்ற திசுதேய்ந்து போவதால் எலும்புகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும். அப்போது அது நோயாளிக்கு கடும்வலியைத் தரும். மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மூலம் எலும்புகள் ஒன்றோடு ஒன்று மோதுவது தவிர்க்கப்படும்.
இவர்களுக்கு மூட்டு எலும்புகளும் தேய்ந்து போயிருக்கும். அது நடக்கும் போது கடும் வலியையும் தரும்.
வாஜ்பாயின் வலது மூட்டு மாற்று அறுவை சிகிச்சை அடுத்தமாதம் 8ம் தேதி அல்லது 9ம் தேதி நடப்பதாக உள்ளது.
இது குறித்து ப்ரீச் காண்டி மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், கடந்த முறை அறுவை சிகிச்சை நடந்தபோதுதங்கியிருந்த அதே அறை வாஜ்பாய்க்காக இப்போது தயாராக உள்ளது.
அடுத்தமாதம் 6ம் தேதி வாஜ்பாய் அறுவை சிகிச்சைக்கு முன்னரான சோதனைக்காக இங்கு வருகிறார். அறுவைசிகிச்சை அடுத்த மாதம் 8-ம் தேதி அல்லது 9ம் தேதி நடக்கும்.
இதற்காக டாக்டர் சித்தரஞ்சன் ரணவத் அடுத்தவாரம் இந்தியா வருகிறார். அறுவை சிகிச்சையின் போதுவாஜ்பாய்க்கு லோக்கல் அனஸ்தீசியா எனும் லேசான மயக்க மருந்துதான் கொடுக்கப்படும்.
அறுவை சிகிச்சையின் போது வாஜ்பாய் முழுவதும் சுயநினைவில்தான் இருப்பார். அறுவை சிகிச்சை முடிந்த பின்வலி தெரியாமல் இருப்பதற்காக வாஜ்பாய்க்கு 48 மணி நேரத்திற்கு வலியை குறைக்கும் மாத்திரைக்கள்கொடுக்கப்படும் என கூறினர்.
வாஜ்பாய்க்கு பொறுத்தவிருக்கும் செயற்கை மூட்டின் விலை ரூ 65,000 அது சென்ற முறை போலவே இந்தமுறையும் அமெரிக்காவிலிருந்து தருவிக்கப்படுகிறது.
இடது மூட்டு மாற்று அறுவை சிகிச்சையின் போது வாஜ்பாய் 1 வார காலம் படுக்கையில் இருக்கும் நிலை ஏற்பட்டது.அதன் பின் அவருக்கு பிசியோதெரபி பயிற்சி அளிக்கப்பட்டது.
1 மாத காலத்திற்குள் வாஜ்பாய் நன்கு நடக்க ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications