தேவர்சிலைக்கு செருப்புமாலை: தென்மாவட்டங்களில் பதட்டம்
திருநெல்வேலி:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருக்கும் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு செருப்பு மாலைபோடப்பட்டிருந்ததை தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவி வருகிறது. பல பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள புதுப்பாளையம் மாரியம்மன் கோவிலருகேயுள்ளவெண்கலத்தாலான முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிலர் செருப்பு மாலைபோட்டுவிட்டு ஓடி விட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை சிலையை பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.அந்த பகுதிக்கு விரைந்து வந்த போலீசார் தேவர் சிலைக்கு போடப்பட்டிருந்த செருப்பு மலையை அகற்றினர்.
தேவர்சிலைக்கு செருப்பு மாலை போடப்பட்ட செய்தி நகரில் பரவியதும் பெரும் பதட்டம் ஏற்பட்டது. மக்கள்சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்த பகுதி வழியாக சென்ற பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.இதில் பல பேருந்துகள் சேதமடைந்தன. இதனால் விருதுநகர் மாவட்டத்தின் பல இடங்களிலும் பதட்டம் நிலவியது.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பதட்டம் நிலவி வருகிறது. பல பகுதிகளில் உள்ள கடைகளும்அடைக்கப்பட்டுள்ளன.
பதட்டம் காரணமாக விருதுநகர் வழியாக தென்காசி, செங்கோட்டை, திருநெல்வேலி, நாகர்கோவில் செல்லும்பேருந்துகளின் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது.
பேருந்துகள் பதட்டம் இல்லாத பகுதிகள் வழியாக மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன.
தேவர்சிலைக்கு அவமதிப்பு ஏற்பட்டது காரணமாக ஜாதி மோதல் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் அந்த பகுதியில்போலீஸ் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது. சங்கரன்கோவில், சேத்தூர், புளியரை, சிவகிரி, கரிவலம்வந்தநல்லூர்போன்ற ஊர்களிலும் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications