சாதனை படைத்த கோவை மாணவிகள்
கோவை:
நடந்து முடிந்த பிளஸ் டூ பொதுத் தேர்வில் கோவை மாணவிகள் பலர் சாதனை படைந்துள்ளனர்.
தாவரவியல் பாடத்தில் முதலிடம் பெற்ற மாணவி மதுமிதா டாக்டராக விருப்பம் தெரிவித்துள்ளார்.
கோவை அவிலா கான்வென்டைச் சேர்ந்த மாணவி மதுமிதா, பிளஸ் டூ தேர்வில் தாவரவியல் பாடத்தில் 200மதிப்பெண்களுக்கு 200 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இது குறித்து மகிழ்ச்சிதெரிவித்த மதுமிதா கூறியதாவது:
எனது தந்தை டாக்டராகப் பணியாற்றி வருகிறார். காரமடையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிவரும் அவரைப் போலவே நானும் டாக்டர் ஆவேன். டாக்டராகி பொதுமக்களுக்குச் சேவை செய்வதே எனதுநோக்கம்.
நான் கடந்த 10ம் வகுப்புத் தேர்விலும் 500 மதிப்பெண்களுக்கு 462 மதிப்பெண்கள் பெற்று நீலகிரி மாவட்டத்தில்முதலிடம் பெற்றேன். தற்போது இந்த முறை மாநில அளவில் முதலிடம் பெற்றதில் மகிழ்ச்சியே என்றார்.
பொருளாதார பாடத்தில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவி வித்யா, பொருளாதார மேதையாவேன் எனத்தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த பிளஸ் டூ பொதுத் தேர்வில் கோவை அவிலா கான்வென்டில் படித்த மாணவி வித்யா, 200க்கு 199மதிப்பெண்கள் பெற்று முதலிடம் வகித்துள்ளார். இவரது சகோதரர் ஸ்ரீராம் சி.ஏ படித்து வருகிறார். இவரது தந்தைஅக்ஷயா என்டர் பிரைசஸ் நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளார்.
மாநிலத்தில் முதலிடம் பெற்றது குறித்து மாணவி வித்யா கூறியதாவது:
நான் 7ம் வகுப்பு முதல் ஒரே பள்ளியில் படித்து வருகிறேன். மாநிலத்தில்முதலிடம் பெறுவேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. இது எனக்கு எதிர்பாராத மகிழ்ச்சியே. நான் பெற்ற இந்த வெற்றிக்கு பெற்றோர் மற்றும்ஆசிரியர்கள் அளித்த உறுதி தான் காரணம். வருங்காலத்தில், நான் மன்மோகன்சிங் போன்ற பொருளாதாரமேதைகளில் ஒருவராக வரவேண்டும் என்பதே எனது ஆசை என்றார்.
மனையியல் பாடத்தில் கோவை மாணவி கலைவாணி மாநிலத்தில் 3வது இடம் பெற்றார். கோவைஅவிநாசிலிங்கம் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். மனையியல் பாடத்தில் 200 மதிப்பெண்ணிற்கு 188 மார்க்குகள்பெற்று மாநிலத்தில் 3வது இடம் பெற்றுள்ளார்.
பிளஸ் டூ தேர்வில் 1200 மதிப் பெண்களுக்கு 996 மதிப்பெண்கள் பெற்றுள்ள இவர், மருத்துவ படிப்பிற்கு நுழைவுத்தேர்வு எழுதியுள்ளார். டாக்டராகி மருத்துவ சேவை செய்வதே இவரது நோக்கம் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தி பாடத்தில் தமிழக மாணவி சங்கீதா மாநிலத்தில் 3வது இடம் பெற்றுள்ளார். கோவை அவிலா கான்வெண்டில்படித்து வந்த இந்த மாணவி, இந்தி பாடத்தில் 200 மதிப்பெண்களுக்கு 196 மதிப்பெண்கள் பெற்று முதலிடம்பெற்றேன்.
நான் இந்தியில் முதலிடம் பெற எனது டீச்சர் சந்தியாவும் ஒரு காரணம். பெற்றோர்களின் ஊக்கம் என்னைசாதனையாளராக மாற்றியது. வருங்காலத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக வேண்டும் என்பதே எனது விருப்பம்என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications