உயிர் பெறுகிறது சர்க்காரியா கமிஷன் வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முன்னாள் முதல்வர் கருணாநிதி மீதான சர்க்காரியா கமிஷன் புகாரை மீண்டும்விசாரிக்க வேண்டும் என பிரதமரை சந்திக்கும் போது வலியுறுத்தப் போவதாக தமிழகமுதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் கூறினார்.

இதையடுத்து தமிழக சட்டசபையில் காரசாரமான விவாதம் வலுத்தது.

இந்த மாதம் 10ம் தேதி நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் ஜெயலலிதாதலைமையிலான அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. அ.தி.மு.க. பெரும்பான்மைபெற்று தனித்து ஆட்சி அமைத்துள்ளது. ஜெயலலிதா முதல்வராகப்பொறுப்பேற்றுள்ளார்.

கடந்த தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது ஊழல் புரிந்ததாகஅவர் மீதும் அவரது அமைச்சரவை சகாக்கள் மீதும் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.இதற்காக தனி நீதிமன்றமும் அமைக்கப்பட்டது.சில வழக்குகளில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா சில வழக்குகளில்விடுவிக்கவும்பட்டார்.

ஸ்பிக் வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், அவரால் தேர்தலில்போட்டியிட இயலாமல் போனது. ஆனாலும் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்குஆதரவாக பிரச்சாரம் செய்து அமோக வெற்றி பெற்று முதல்வராகியுள்ள ஜெயலலிதா,யார் மீதும் பழி வாங்கும் நடவடிக்கை எடுக்கமாட்டோம்; ஆனால் குற்றம்செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.

இந்நிலையில் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம்திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது பேசிய ஜெயலலிதா கருணாநிதி மீதானசர்க்காரியா கமிஷன் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என பிரதமரைவலியுறுத்தவிருப்பதாக கூறினார்.

அதை சந்திக்கும் விதமாக தி.மு.க. மத்திய அரசைவிட்டு விலக தயாரா? எனவும்கேள்வி எழுப்பினார்.

தி.மு.க எம்.எல்.ஏ வைத்தியலிங்கம் கூறுகையில், குற்றம் செய்தவர்கள் மீது வழக்குபோடுங்கள். ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள். எதையும் சந்திக்க தி.மு.க.தயாராக உள்ளது.

தவறு செய்தவர் என தெரிந்ததும் அமைச்சர் மீதே கிரிமினல் வழக்கு போடப்பட்டதுதி.மு.க ஆட்சியில்தான் என்றார்.

எதிர்க்கட்சி தலைவர் அன்பழகன் கூறுகையில், சர்க்காரியா கமிஷன் மீது விசாரணைசெய்ய இன்னமும் காலம் கடந்துவிடவில்லை.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது இரண்டு முறை அட்வகேட் ஜெனரலிடம்ஆலோசனை கேட்ட போது ஆதாரம் இல்லை என கூறப்பட்டதால்தான் வழக்குதொடராமல் கைவிடப்பட்டது என்றார்.

ஆனால் இதை மறுத்து ஜெயலலிதா பேசியதாவது:

இது தவறான தகவல். ஊழல் குற்றச்சாட்டுகள் தொடரப்பட்ட போது அப்போதையமத்திய அரசு கருணாநிதி மீது விசாரணை கமிஷன் அமைத்தது.

அதற்கு உதவ சி.பி.ஐயும் விசாரணையில் இறங்கியது. இந்த விசாரணையில்கண்டுபிடிக்கப்பட்ட தகவல்களை சர்க்காரியா கமிஷன் அறிக்கையாக வெளியிட்டது.

இந்த வழக்கை விசாரிக்க சிபி.ஐ. தனி நீதிமன்றத்தை சென்னையில் அமைத்தது.ஆனால் தான் பொது ஊழியர் அல்ல என கூறி அந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறுதனி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் கருணாநிதி. ஆனால் அவரது மனுதான்தள்ளுபடி செய்யப்பட்டது.

பின் உச்ச நீதிமன்ற அரசியல் சட்ட பெஞ்ச்வரை மேல் முறையீடு செய்தார். ஆனால்அவர் வழக்கை சந்திக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டதும்,பிரதமர்இந்திராகாந்தியிடம் சரணடைந்தார் கருணாநிதி.

அரசியல் காரணங்களுக்காக கருணாநிதி மீதான வழக்கு வாபஸ் பெறப்பட்டது. இதில்நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய அரசுதான்.

இப்போது மத்திய அரசில் தி.மு.க. அங்கம் வகிக்கிறது. எனவே, மீண்டும் சர்க்காரியாகமிஷன் வழக்கை விசாரிக்கவைத்து அதற்கு முன்னால் கருணாநிதியை நிறுத்தத்தயாரா?நாங்கள் கூறினால் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காது என்று நான் கூற மாட்டேன்.

விரைவில் பிரதமரை சந்திக்கும்போது நான் இது குறித்து வலியுறுத்துவேன். அதற்குவழிவிடும் வகையில் நீங்கள் மத்திய அரசைவிட்டு வெளியேற வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்த வைத்தியலிங்கம் கூறுகையில், நீங்கள் தாராளமாகவலியுறுத்துங்கள். நாங்கள் குறுக்கே நிற்க மாட்டோம் என்றார்.

இத்துடன் காரசாரமான விவாதம் முடிவுக்கு வந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+