கோர்ட்டில் மயங்கி விழுந்தார் பரிதி இளம்வழுதி
சென்னை:
சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கொண்டு வரப்பட்ட தி.மு.க.எம்.எல்.ஏ பரிதி இளம்வழுதியைபோலீஸார் தாக்கியதாக அவர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலின்போது எழும்பூர் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் பரிதி இளம்வழுதி மற்றும்அ.தி.மு.க ஆதரவு வேட்பாளர் ஜான் பாண்டியன் ஆகியோரின் ஆதரவாளர்களுக்கிடையே பெரும் மோதல்ஏற்பட்டது. இதுதொடர்பாக பரிதி இளம்வழுதியும், ஜான் பாண்டியனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பரிதி இளம்வழுதி மீது செவ்வாய்க்கிழமை மேலும் 2 வழக்குகள்பதிவு செய்யப்பட்டன. இதுதொடர்பாக அவரை கோர்ட்டில் ஆஜர் செய்வதற்காக செவ்வாய்க்கிழமை சென்னைஎழும்பூர் 14-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்குக் கொண்டு வரப்பட்டார்.
காலையிலேயே அவர்கள் வந்து விட்டாலும்கூட மாலையில்தான் ஆஜராக வேண்டும் என்பதால் வேனிலேயேபரிதி வைக்கப்பட்டு இருந்தார். அவரை அணுகிய செய்தியாளர்களிடம் பரிதி பேச முற்பட்டார். அதற்கு போலீஸார்அனுமதி மறுத்தனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது திருவல்லிக்கேணி துணை போலீஸ்கமிஷனர் ரங்கராஜன் பரிதியை தாக்கியதாகக் கூறப்படுகிறது. செய்தியாளர்கள் சிலரும் இந்த மோதலில் கீழேதள்ளப்பட்டனர்.
போலீஸ் தாக்குதலில் மயங்கி விழுந்த பரிதி இளம்வழுதி பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போதுதன்னைப் போலீஸார் தாக்கியதாகவும், தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். அதன் பிறகுபோலீஸாரின் வேண்டுகோளையேற்று 1 நாள் போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடுவதாகவும்,விசாரணையின்போது பரிதியின் வழக்கறிஞர்கள் 2 பேர் உடனிருக்கலாம் என்றும் நீதிபதி பூபாலன் உத்தரவிட்டார்.
பின்னர் பரிதி வெளியில் காத்திருந்த செய்தியாளர்களிடம் பேசுகையில், என்னைக் கொல்ல முயற்சி நடக்கிறது.போலீஸார் அராஜகமாக நடந்து கொண்டுள்ளனர். எனது உயிருக்கு ஏதாவது ஏற்பட்டால் அதற்கு போலீஸாரும்,இந்த அரசும், கோர்ட்டும்தான் பொறுப்பேற்க வேண்டும்.
3 முறை எம்.எல்.ஏவாக இருந்துள்ளேன். என்னை எம்.எல்.ஏவாக பதவியேற்க விடாமல் தடுக்க முயற்சிநடக்கிறது. 31-ம் தேதிக்குள் நான் பதவியேற்க வேண்டும். அதைத் தடுப்பதற்காகத்தான் பொய்யான வழக்கைபோட்டிருக்கிறார்கள். எனது அரசியல் வாழ்க்கையில் இதுவரை ஒரு வழக்கு கூட போட்டதில்லை என்றார் பரிதி.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications