ரங்கநாதன் கைது: சபையிலிருந்து திமுக வெளிநடப்பு
சென்னை:
தமாகா ஜனநாயகப் பேரவை எம்.எல்.ஏ.ரங்கநாதன் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து திமுகவும்,அதன் தோழமை கட்சிகளும் புதன்கிழமை சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தன.
புதன்கிழமை சட்டசபை கூடியதும் தமாகா ஜனநாயகப் பேரவை எம்.எல்.ஏ.ரங்கநாதன் கைது செய்யப்பட்டதைசபாநாயகர் காளிமுத்து சட்டசபையில் முறையாக அறிவித்தார்.
இதையடுத்து, அதிமுக, எதிர்க்கட்சியின் ஜனநாயகக் கடமையை ஆற்ற விடாமல் தடுக்கிறது என்று கூறி திமுகவும்,அதன் தோழமை கட்சிகளும் சபையிலிருந்து வெளிநடப்புச் செய்தன.
சபையிலிருந்து வெளிநடப்புச் செய்த எதிர்க்கட்சித் தலைவர் அன்பழகன் நிருபர்களிடம் கூறுகையில், அதிமுக அரசுஉள்நோக்கத்துடன் செயல்படுகிறது. காவல்துறையின் அராஜகப் போக்கு கண்டிக்கத் தக்கது.
சட்டசபை உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் விதத்தில் திமுக சபையிலிருந்து வெளிநடப்புச் செய்கிறதுஎன்றார்.
திமுக கூட்டணியில் உள்ள பாஜக சட்டசபைக் கட்சித் தலைவர் லட்சுமண் கூறுகையில், பொய்யானகுற்றச்சாட்டுக்களைக் கூறி திமுக எம்.எல்.ஏ.க்களின் மீதும், திமுக கூட்டணிக் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் மீதும்நடவடிக்கை எடுத்து வருகிறது அதிமுக. இதைக் கண்டித்து வெளிநடப்புச் செய்கிறோம் என்றார்.
எம்.ஜி.ஆர்.அதிமுக சட்டசபைத் தலைவர் ஆஸ்டின் கூறுகையில், அதிமுக அரசு பழிவாங்கும் விதத்தில் நடந்துகொள்கிறது. இதைக் கண்டித்து நாங்கள் சபையை விட்டு வெளியேறுகிறோம் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications