ஜீவன் இழக்கும் விலங்கியல் பூங்காக்கள்
டெல்லி:
இந்தியாவில் உள்ள அனைத்து மிருகக்காட்சி சாலைகளிலும் விலங்குகள் தொடர்ந்து பல நோய்களுக்கு உள்ளாகிஉயிரிழந்து வருகின்றன.
கடந்த வருடம் ஜூலை மாதம் ஒரிசா நந்தன்கானன் மிருகக்காட்சி சாலையில் டஜன் கணக்கில் புலிகள் மற்றும் வனவிலங்குகள் உயிரிழந்தன. இதற்கான காரணம் என்ன என்று இதுவரை கண்டு பிடிக்கவில்லை.
மிருகக்காட்சி சாலையில் விலங்குகள் தொடர்ந்து உயிரிழந்து வந்தாலும் கூட இதுகுறித்து சம்பந்தப்பட்டஅதிகாரிகள் யாரும் நடவடிக்கைகள் எடுப்பதாகவே தெரியவில்லை. ஏனெனில் ஒரிசா மிருகக்காட்சி சாலையில்புலிகள் உள்பட பல விலங்குகள் உயிரிழந்தும் யாரும் மேற்கொண்டு விலங்குகளை பாதுகாக்கும் நடவடிக்கையில்ஈடுபடவில்லை.
இதே போல் மும்பையில் உள்ள மிருகக்காட்சி சாலையில் 3 புலிகள் மின்சாரம் தாக்கி பலியாகின.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிறந்து இரண்டு வருடங்களே ஆன புலி ஒன்று ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது. இதேமாநிலத்தில் மூன்று வயது புலி ஒன்று டிராக்டரில் அடிபட்டு உயிரிழந்தது.
கொல்கத்தாவில் உள்ள அலிப்போர் மிருகக்காட்சி சாலையில் ஒரு கங்காரு, இரண்டு மான்கள் ஆகியவைநோய்வாய்ப்பட்டு உயிரிழந்தன.
டெல்லியில் உள்ள மிருகக்காட்சி சாலையில் பல விலங்குகள் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தன. டார்ஜிலிங்மிருகக்காட்சி சாலையில் உள்ள சிறுத்தை ஒன்று நிமோனியா நோயால் உயிரிழந்தது.
இதே போல் மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் பல மயில்கள் உயிரிழந்துள்ளன. ராஜஸ்தானில் மான்கள்உயிரிழந்துள்ளன.
விலங்குகள் உரிமை பாதுகாப்பு தொண்டர் இக்பால் மாலிக் என்பவர் கூறுகையில், இந்தியாவில் உள்ள 300 க்கும்மேற்பட்ட மிருகக்காட்சி சாலைகளில் 65, 000 க்கும் மேற்பட்ட விலங்குகள் உள்ளன. ஆனால் அவற்றில்பெரும்பாலானவை உயிரிழந்துவிட்டன என்றார்.
மிருகங்கள் பாதுகாப்பு அமைப்பு மேலாளர் விந்தியா சாஹல் கூறுகையில், இந்தியாவில் உள்ள மிருகக்காட்சிசாலையில் மிருகங்கள் அதிகமாக இருப்பதால் பராமரிக்க போதுமான ஆட்கள் இருப்பதில்லை.
விலங்குகளை வைத்துப் பராமரிப்பதற்கான அடிப்படை வசதிகள் அனைத்து மிருகக்காட்சி சாலைகளிலும்இருப்பதில்லை. விலங்குகளுக்கு ஏதாவது நோய்கள் ஏற்பட்டால் அவைகளுக்கு மருத்துவப் பரிசோதனைசெய்வதற்கு போதிய கால்நடை மருத்துவர்கள் இருப்பதில்லை. இதுபோன்ற காரணங்களே விலங்குகள்உயிரிழப்பதற்குக் காரணம் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications