இலங்கையில் பத்திரிக்கைகளுக்கு மீண்டும் சுதந்திரம்
கொழும்பு:
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையே நடந்து வரும் சண்டை குறித்தசெய்திகளை வெளியிடுவதற்கு விதித்திருந்த தணிக்கையை இலங்கை அரசு விலக்கிக் கொண்டுள்ளதை பலஅரசியல் வல்லுனர்களும், பத்திரிக்கையாளர்களும் வரவேற்றுள்ளனர்.
இலங்யிைல் பல ஆண்டுகளாக விடுதலை புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையே சண்டை நடந்துவருகிறது.
1998ம் ஆண்டு முதல் இலங்கையில் உள்ள உள் நாட்டு பத்திரிக்கைகளும், அயல்நாட்டு பத்தரிக்கைகளும்விடுதலை புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடைபெற்று வந்த சண்டை குறித்த செய்திகளைஇலங்கை அரசு தணிக்கை விதித்திருந்தது.
இந்த தணிக்கை செவ்வாய்க்கிழமை முதல் விலக்கிக் கொள்வதாக இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காஅறிவித்தார்.
இலங்கை அரசின் இந்த முடிவு பத்திரிக்கையாளர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
இது குறித்து தினக்குரல் நாளிதழின் ஆசிரியர் ஸ்ரீநிவாசசெல்வம் கூறுகையில், நார்வே தூதுக்குழுவினர் அமைதிபேச்சுவார்த்தைக்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நிலையில் சண்டை குறித்த செய்திகளை வெளியிடுவதற்குவிதித்திருந்த தணிக்கையை இலங்கை அரசு விலக்கிக் கொண்டுள்ளது. வரவேற்கத்தக்கது என்றார்.
அரசியல் வல்லுனர் ஜெஹான் பெரேரா கூறுகயிைல், தற்போது இலங்கை அரசு சண்டை குறித்த் செய்திகளைவெளியிடுவதற்கான தணிக்கையை விலக்கிக் கொண்டுள்ளது வரவேற்கத்தக்கது. சண்டை நடக்கும் பகுதிகளுக்குபத்திரிக்கையாளர்களை செல்ல அனுமதிக்க வேண்டும் என்றார்.
இலங்கை அரசின் இந்த முடிவு சண்டை குறித்த உண்மையான நிலைகளை மக்கள் அறிய உதவும் என்றுகருதப்படுகிறது.
யு.என்.ஐ.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications