நான் அப்படிச் செய்தேன்... இவர் இப்படி செய்கிறார்
சென்னை:
எங்கள் கட்சியினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் மீது நடவடிக்கை எடுப்பதற்காகத் தான் போலீஸ் அதிகாரிகளைஜெயலலிதா மாற்றம் செய்து வருகிறார் என முன்னாள் முதல்வர் கருணாநிதி குற்றம் சாட்டினார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
திமுக மீது நடவடிக்கை எடுப்பதற்காகத் தான் மாநிலம் முழுவதும் போலீஸ் அதிகாரிகளை மாற்றம் செய்துவருகின்றனர். ஜெயலலிதா அரசின் உத்தரவுக்கு அடிபணிந்து போலீசும் அடக்குமுறையில் ஈடுபட்டு வருகிறது.
ஆட்சி மாற்றம் ஏற்படும்போது போலீஸ் அதிகாரிகளை மாற்றுவது சகஜம் தான். ஆனால், இப்படிஒட்டுமொத்தமாக அதிகாரிகள் மாற்றப்படுவது இது தான் முதல்முறையாகும்.
டி.ஜி.பியாக உள்ள ராஜகோபாலன் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர். இருந்தாலும் அவரை டி.ஜி.பியாக நான்நியமித்தேன். அவர் ஒரு வழக்கில் தவறான சில பேரை கைது செய்துவிட்டதாகக் கூட செய்திகள் வந்தன. ஆனால்,அதையெல்லாம் மீறி அவரை நான் டி.ஜி.பியாக நியமித்தேன்.
அதேபோல எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்த மூத்த அதிகாரி அலெக்சாண்டரையும் நான் மாற்றவில்லை.அவருக்கு நல்ல பதவியைத் தான் தந்தேன்.
ஆனால், தனது பேச்சைக் கேட்டு ஆடும் அதிகாரிகளை ஜெயலலிதா உயர் பதவிகளில் நியமித்து வருகிறார். பிறஅதிகாரிகளை பந்தாடி வருகிறார் என்றார் கருணாநிதி.
-
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications