அதிமுக அவைத் தலைவர் யார்?
சென்னை:
அதிமுக அவைத் தலைவராக இருந்த கா.காளிமுத்து சபாநாயகராக மாறி விட்டதால் அந்தப் பதவிக்குரியவர்யார் என்ற ஆலோசனை அதிமுக வட்டாரத்தில் நடந்து வருகிறது.
அதிமுகவில் பொதுச் செயலாளருக்கு இணையான பதவியாக அவைத் தலைவர் பதவி உள்ளது. பொதுக்குழு,செயற்குழுக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குவது அவைத் தலைவர்தான்.
எம்.ஜி.ஆர். கட்சியைத் தொடங்கியபோதே இந்தப் பதவியும் தொடங்கப்பட்டது. முதல் அவைத் தலைவராகவள்ளிமுத்து இருந்தார். கடைசியாக காளிமுத்து இருந்தார். சபாநாயகர் பதவியை ஏற்பதற்கு வசதியாகஅவைத் தலைவர் பதவியை காளிமுத்து ராஜினாமா செய்து விட்டார்.
தற்போது அடுத்த அவைத் தலைவர் யார் என்ற ஆலோசனையில் ஜெயலலிதா இறங்கியுள்ளார். தற்போதுள்ளமூத்த தலைவர்களில் ஒருவரை அவைத் தலைவராக்குவார் ஜெயலலிதா எனத் தெரிகிறது.
அப்படிப் பார்த்தால், முன்னாள் அமைச்சர்கள் அரங்கநாயகம், முத்துச்சாமி மற்றும் சுலோச்சனா சம்பத்,புலமைப்பித்தன், விசாலாட்சி நெடுஞ்செழியன் என சிலருடைய பெயர்கள் அடிபடுகின்றன. இவர்களில்அரங்கநாயகத்திற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
இருப்பினும் டெல்லி சென்று பிரதமரைச் சந்திக்கவுள்ள ஜெயலலிதா, டெல்லியிலிருந்து திரும்பியதும் இதுகுறித்துஅறிவிப்பார் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications