ப.சிதம்பரம் கட்சி எம்.எல்.ஏ மீது வழக்கு
சென்னை:
சென்னை புரசைவாக்கம் தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை எம்.எல்.ஏ. ரங்கநாதன் மீதுவிதிமுறைக்குப் புறம்பாக குறிப்பிட்ட நேரத்தைக் கடந்து பொழுதுபோக்கு கிளப்பை நடத்தியதாக போலீஸார்வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
பெரம்பூர் அருகே ஜவஹர் நகரில் எம்.எல்.ஏ ரங்கநாதனுக்குச் சொந்தமான சென்னை ராயல் கிளப் என்றபொழுதுபோக்கு கிளப் உள்ளது. இந்த கிளப் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட வேண்டும்என்பது விதி. ஆனால் குறிப்பிட்ட நேரத்தைக் கடந்து இது இயங்குவதாக போலீஸாருக்குத் தெரிய வந்தது.
இதையடுத்து கமிஷனர் முத்துக்கருப்பன் உத்தரவின்பேரில் போலீஸார் மாறுவேடத்தில் கிளப்பிற்குச் சென்றுசோதனை நடத்தினர். அப்போது இரவு 11 மணிக்கு மேலும் கிளப் இயங்கவே மாறுவேடத்தில் இருந்த போலீஸார்கிளப் துணைத் தலைவர் தாமஸ் செல்வராஜ் உள்ளிட்ட 12 பேரை கைது செய்துள்ளனர்.
கிளப்பின் தலைவர் எம்.எல்.ஏ. ரங்கநாதன் மற்றும் 12 பேர் மீதும் போலீஸார் வழக்குத் தொடர்ந்தனர்.போலீஸாரின் நடவடிக்கை குறித்து அறிந்த ரங்கநாதன் எழும்பூர் 5-வது மெட்ரோபாலிடன் கோர்ட்டில் ஆஜராகிதன்னை ஜாமீனில் விடுதலை செய்யுமாறு மனுச் செய்தார். மனுவை ஏற்ற நீதிபதி ரங்கநாதனை ஜாமீனில் விடுதலைசெய்ய உத்தரவிட்டார். கைது செய்யப்பட்ட 12 பேரையும் ஜாமீனில் விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
கோர்ட் வளாகத்தில் ரங்கநாதன் செய்தியாளர்களிடம் பேசுகையில், என்னை அசிங்கப்படுத்த வேண்டும்,களங்கப்படுத்த வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக பொய்யான காரணத்தைக் காட்டி என் மீது போலீஸார்வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிமுக அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையை சட்டரீதியாகசந்திக்க தயாராக உள்ளேன் என்றார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications