கூட்டணி கட்சிகளின் உதவியை நாடுகிறது திமுக
சென்னை:
அதிமுகவினரின் பழிவாங்கும் நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்குதிமுக அழைப்பு விடுத்துள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையில் இந்தக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு நடக்கிறது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பாஜக பொதுச்செயலாளர் இல.கணேசன், மக்கள் தமிழ் தேசம் கட்சித்தலைவர் கண்ணப்பன், எம்.ஜி.ஆர்.அதிமுக தலைவர் திருநாவுக்கரசு, புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம்,விடுதலை சிறுத்தைகள் அமைப்புத் தலைவர் திருமாவளவன், தமாகா ஜனநாயகப் பேரவை தலைவர் சிதம்பரம்உள்பட கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிமுக அரசு பதவியேற்றுக் கொண்டவுடன், திமுக எம்.எல்.ஏ.பரிதி இளம்வழுதி, தமாகா ஜனநாயகப்பேரவை எம்.எல்.ஏ.ரங்கநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
காண்ட்ராக்டரிடம் கமிஷன் பெற்ற வழக்கில் மேயர் ஸ்டாலினும் கைது செய்யப்படலாம் என்று பரபரப்பாகப்பேசப்படுகிறது. அதனால் அதிமுக மேற்கொள்ளும் பழிவாங்கும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க திமுக அதன்கூட்டணிக்கட்சித் தலைவர்களுடன் வெள்ளிக்கிழமை மாலை ஆலோசனை நடத்துகிறது.
இந்தக் கூட்டத்தில் அதிமுக அரசை எதிர்த்து கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. ஏற்கனவே கவர்னர்உரையை திமுக புறக்கணித்தது. திமுகவுக்கு ஆதரவாக அதன் கூட்டணிக் கட்சிகளும் சட்டசபையை புறக்கணித்தன.
அதே போல் அதிமுக அரசை எதிர்த்து மேற்கொள்ளப் போகும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் கூட்டணிக் கட்சிகள்ஆதரவு தர வேண்டும் என்று கருணாநிதி விரும்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications