சர்க்காரியா: கருணாநிதி மீது விரைவில் வழக்குப்பதிவு
சென்னை:
சர்க்காரியா கமிஷன் அறிக்கையின் அடிப்படையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி மீது வழக்குதொடரப்போவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி மீது 25 ஆண்டுக்கு முன் சர்க்காரியா கமிஷன் வெளியிட்ட அறிக்கையின்அடிப்படையில் அவர் மீது வழக்கு தொடரப்போவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார்.
வீராணம் திட்டம் தொடர்பாக சட்டசபையில் வெள்ளிக்கிழமை விவாதம் நடந்த போது முதல்வர்ஜெயலலிதாவுக்கும். தி.மு.க, உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.
ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு முதல்வர் வெள்ளிக்கிழமைபதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில், சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக,எனது ஆட்சியின் போது 1991ம் ஆண்டு புதிய வீராணம் திட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக மத்திய அரசின் மூலம் உலக வங்கியின் கடனும் பெறப்பட்டது. நாங்கள்கொண்டு வந்த திட்டத்தை தி.மு.க. அரசு செயல்படுத்தியிருந்தால் சென்னை மக்களின் குடிநீர் பஞ்சம் தீர்ந்திருக்கும்.
கருணாநிதிக்கு வீராணம் என்றாலே சர்க்காரியா கமிஷன்தான் நினைவுக்கு வரும் போலிருக்கிறது. அதனால்தான்அவரால் இந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை.
இப்போது மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்துள்ளோம். புதிய திட்டத்தை நாங்கள் செயல்படுத்துவோம் என்றார்.
ஆற்காடு வீராசாமி பதில்:
வீராணம் என்றால் கருணாநிதிக்கு சர்க்காரியா கமிஷன்தான் நிளைவுக்கு வருகிறது என முதல்வர் கூறுகிறார்.சர்க்காரியா கமிஷன் விசாரணை அறிக்கையில் வீராணம் திட்டத்தில் ஊழல் நடந்ததாக நிரூபிக்கப்படவில்லைஎன்றார்.
ஜெயலலிதா பதில்:
எதிர்கட்சி துணைத்தலைவர் தன் கட்சியின் தலைவருக்கு கடமையாற்றுகிறார்.
புதிய வீராணம் திட்டத்தை செயல்படுத்தவதற்காக நான் பாடுபட்டு உலகவங்கியிடம் கடன் வாங்கியிருந்தேன்.இந்த திட்டத்திற்கான அடிப்படை பணிகளையும் செய்து முடித்திருந்தேன். அதை ஏன் தி.மு.க. அரசுநிறைவேற்றவில்லை? என கேள்வி எழுப்பினார்.
புதிய வீராணம் திட்டத்தை நாங்கள் வேண்டுமென்றே கைவிடவில்லை. இந்த திட்டம் குறித்து அதிகாரிகளிடம்பேசினோம். காவிரி பிரச்சனை தீராமல் புதிய வீராணம் திட்டத்தை செயல்படுத்த முடியாது என கூறினர்.
சந்தேகம் இருந்தால் அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என ஆற்காடு வீராசாமி காட்டமாகபதிலளித்தார்.
உலகவங்கியின் நிபுணர்கள் பார்வையிட்டு ஒப்புதல் அளித்த திட்டம் புதிய வீராணம் திட்டம் அந்த திட்டத்தைஇப்போது நிறைவேற்ற வேண்டுமென்றால், மேலும் பல கோடி ரூபாய் செலவாகும்.
அரசியல் உள்நோக்கம் காரணமாக புதிய வீராணம் திட்டம் நிறைவேற்றப்படவில்லை என குற்றம் சாட்டினார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications