நாகர்கோவிலில் உழவர் சந்தையை மூட கடும் எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

எதிர்க்கட்சி தலைவர் அன்பழகன் விளக்கம்:

புதிய வீராணம் நிறைவேற்றப்படாததில் எந்த உள்நோக்கமும் இல்லை. இந்த திட்டத்திற்கு அந்த பகுதி விவசாயிகள்எதிர்ப்பு தெரிவித்தனர். இது தவிர தண்ணீர் வரும் வழியில் உள்ள கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள்தங்களுக்கும் பாசனத்திற்கு தண்ணீர் வேண்டும் என வற்புறுத்தினர்.

இவை எல்லாவற்றையும் விட காவிரி பிரச்சனை நடுவர் மன்றத்தில் உள்ளது. காவிரி பிரச்சனை தீராமல் இந்ததிட்டத்தை செயல்படுத்த முடியாது என அதிகாரிகள் கூறினர்.

இதுதான் இந்த திட்டம் நிறைவேற்றபடாததற்கு முக்கிய காரணம். வேறு எந்த விதமான காரணமும் கிடையாது

சர்க்காரியா கமிஷனில் ஊழல் நடந்ததாக எந்த இடத்திலும் கூறப்படவில்லை என்றார்.

இந்நிலையில நிதியமைச்சர் பொன்னையன் விவாதத்தில் புகுந்தார். அவர் கூறுகையில், சர்க்காரியா கமிஷன்அறிக்கையில் வீராணம் திட்டத்திற்கான கான்டிராக்டர் சத்தியநாராயாணவின் வாக்குமூலமும், அவரது மருமகன்வாக்குமுலமும் உள்ளது என்றார்.

இதைத் தொடரந்து ஜெயலலிதா கூறுகையில், சத்தியநாராயணா கருணாநிதிக்கு லஞ்சம் கொடுத்தார். அதன்காரணமாக வீராணம் திட்டத்தை செயல்படுத்த முடியாமல் அவர் வைர மோதிரம் தின்று தற்கொலை செய்துகொண்டார் என சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டை ஆற்காடு வீராசாமி மறுத்தார். சத்யா நாராயணாவின் மருமகன் புருஷோத்தமன் டெல்லியில்சர்க்காரியா கமிஷனின் விசாரணைக்கு பதிலளிக்கும் போது நானும் உடனிருந்தேன்,

அவர் கருணாநிதிக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறவில்லை என்றார்.

ஆனாலும் பொன்னையன் விடவில்லை. ஊழல் காரணமாக இழப்பு ஏற்பட்டுள்ளது என புருஷோத்தமன் ஒப்புக்கொண்டுள்ளாரே என மடக்கினார்.

ஆற்காடு வீராசாமியும் சளைக்கவில்லை. இழப்பு என்பது வேறு. கருணாநிதிக்கு பணம் கொடுத்ததால்தான் இழப்புஎன கூறியிருக்கிறாரா என்பதுதான் கேள்வி. இது பற்றி சட்டசபையில் முழுமையான விவாதம் நடத்தப்படவேணடும். விவாதத்திற்கு தி.மு.க.தயாராக இருக்கிறது என்றார்.

லஞ்சத்தால் ஏற்பட்ட பாதிப்பு என புருஷோத்தமன் கூறியுள்ளார் என மீண்டும் பொன்னையன் கூறினார்

ஜெயலலிதாவும் பொன்னையன் கூறியதை வழி மொழியும் விதமாக பேசினார். கருணாநிதிக்கு லஞ்சம்கொடுத்ததாக புருஷோத்தமன் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

இது பற்றி விவாதம் நடத்தி அவையின் நேரத்தை நான் வீணாக்க விரும்பவில்லை. இந்த பிரச்சனை குறித்துபேசப்பட வேண்டிய இடம் நீதிமன்றம்தான்.

சர்க்காரியா கமிஷனின் அடிப்படையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி மீது தமிழக அரசு வழக்கு தொடரும்என்றார்.

இவ்விதமாக விவாதம் காரசாரமாக நடந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+