மீனவர்களுக்கு மன்னிப்பு வழங்குங்கள்: இலங்கை அமைச்சர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

இந்திய - இலங்கை அரசுகளால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் மினவர்களுக்கு மன்னிப்புவழங்கி அவர்களை விடுவிக்க வேண்டும் என இலங்கையின் மீன்வளத்துறை அமைச்சர்மஹிந்தா ராஜாபக்சே கூறியுள்ளார்.

இலங்கையின் மீன்வளத்துறை ராஜ்பக்சே, இலங்கையின் மின்சாரத்துறை மற்றும் எரிசக்திதுறை இணை அமைச்சர் ஃபெலிக்ஸ் பெரேராவுடனும், அதிகாரிகளுடனும் இந்தியாவந்துள்ளார்.

பெரேராவின் தொகுதியான ஜா இலாவிலிருக்கும் மீனவர்கள்தான் அதிக அளவில் இந்தியகடற்பகுதிக்குள் நுழைந்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பகுதிக்குள் சென்றால் அவர்கள் இலங்கைகடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர். அதே போல் இலங்கை மீனவர்கள் இந்தியகடல் எல்லைக்குள் வந்தால் அவர்கள் இந்திய கடலோர காவற்படையால் கைதுசெய்யப்படுகின்றனர். இது தொடர்ந்து நடந்து வரும் நிகழ்ச்சி.

சிறையில் இருக்கும் இரு நாட்டு மீனவர்களுக்கும் மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலைசெய்ய வேண்டும் என இந்தியா வந்துள்ள இலங்கை மீன் வளத்துறை அமைச்சர் ராஜபக்சேகூறியுள்ளார்.

இது குறித்து ராஜபக்சே செய்தியாளர்களிடம் கூறுகையில், இருநாட்டு மீனவர்களுக்கும்மன்னிப்பு வழங்கப்பட்டு, நல்லெண்ண அடிப்படையில் அவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும். இந்த கருத்தை நான் இந்திய விவசாய அமைச்சர் நிதீஷ் குமாரிடம்கூறியுள்ளேன்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக 63 இலங்கை மீனவர்கள் இந்தியகடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்திய மீனவர்கள் 39 பேர் இலங்கை கடற்படையினரால் இந்த ஆண்டு கைதுசெய்யப்பட்டுள்ளனர். இரு நாட்டு மீனவர்களுக்கும் மன்னிப்பு வழங்கப்பட வேண்டும்.ஆனாலும் இது யார் யார் மீது கிரிமினல் வழக்கு எதுவும் இல்லையோ அவர்களுக்குமட்டும் தான் பொருந்தும்.

இருநாட்டு கடல் எல்லைக்குள்ளும் மீனவர்கள் மீன் பிடிக்க உரிமம் (லைசென்ஸ்)வழங்கப்பட வேண்டும். இது இரு நாட்டு மீனவர்களும் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்தாலும் பிரச்சனையை உருவாக்காது.

மேலும் இது இலங்கை மீனவர்கள் இந்திய கடற்பகுதி வழியாக சர்வதேச கடற்பகுதிக்குபத்திரமாக செல்லவும் வழி வகுக்கும்.

இலங்கையிலிருந்து இந்தியா வரும் பக்தர்கள் புத்தர் ஆலயத்திற்குள் செல்லவேண்டுமானால் இந்திய தொல்பொருள் ஆராய்சிக் கழகத்தின் ஆணைப்படி 5 அமெரிக்கடாலர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன் காரணமாக பல பக்தர்கள் புத்தர்ஆலயங்களுக்குள் செல்ல முடியாமல் வருத்தத்துடன் இலங்கை திரும்பி வருகின்றனர்.

இந்த விஷயம் குறித்து விசாரித்து ஆவண செய்வதாக நிதிஷ் குமார் கூறியுள்ளார்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் வரும் இந்தியர்களுக்கு, இலங்கை சுற்றுலா மையங்களில்இலங்கை மக்களுக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறதோ அதே அளவு கட்டணம்வசூலிக்கப்படுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படும்.

இந்திய பிரதமர் வாஜ்பாய் பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப்பைபேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பது பாராட்டத்தக்கது. இது வாஜ்பாயின் அரசியல்முதிர்ச்சியையும், ராஜ தந்திரத்தையும் எடுத்துக் காட்டுகிறது.

இது இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா விடுதலை புலிகளை பேச்சுவார்த்தைக்குஅழைத்திருப்பதற்கு ஒப்பானது.

காஷ்மீரில் அமைதி ஏற்படுவது. இந்தியா -பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல இந்த பகுதியில்உள்ள எல்லாருக்கும் நன்மைபயப்பதாக அமையும் என்றார்.

ராஜபக்சே கூறியுள்ள கருத்துக்கள் குறித்து இரு நாட்டு அதிகாரிகளும் விரிவான விவாதம்நடத்தினர்.

இலங்கை அதிகாரிகள் தங்கள் கருத்துக்களை விரைவில் இந்தியாவிற்கு அனுப்பிவைப்பதாக கூறியுள்ளனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+