மேயர் தேர்தலும், கால்வாயே இல்லாமல் பறந்து வந்த கிருஷ்ணா நீரும்!

Subscribe to Oneindia Tamil

அணைக்கட்டிலிருவந்து கால்வாயில் மழை நீரைத் திறந்துவிட்டுவிட்டு சென்னைக்கு கிருஷ்ணா நீர் கொண்டு வந்தோம்என திமுக அரசு தவறான விவரம் தந்தது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா கூறிய குற்றச்சாட்டுக்கு திமுக ஆட்சியில் அமைச்சர்களாய்இருந்த அன்பழகன், துரைமுருகனால் சரியான பதில் அளிக்க முடியவில்லை.

மேயர் பதவிக்கு ஸ்டாலின் போட்டியிட்ட சென்னை மாநகராட்சித் தேர்தலை மனதில் கொண்டு சென்னைக்குகிருஷ்ணா நீர் வந்துவிட்டதாக திமுக ஆட்சியில் மோசடி நாடகம் நடத்தப்பட்டதாக ஜெயலலிதா கூறியுள்ளார்.

ஜெயலலிதா மீதும் அதிமுகவினர் மீதும் தொடர் வழக்குகளை ஒருபுறம் நடத்தினாலும் மறுபக்கம் அடிப்படைவசதிகளைச் செய்து தருவதில் திமுக மாபெரும் சாதனைகள் புரிந்ததாக கருதப்பட்டது.

ஆனால், இதில் பல சாதனைகளில் உண்மையில்லை என்ற விவரம் இப்போது புதிய அரசு பதவியேற்ற கையோடுவெளிவரத் தொடங்கியுள்ளது.

ஜெயலலிதா சொல்கிறார் என்பதற்காகவே இந்தக் குற்றச்சாட்டுகளை நாம் நிராகரித்துவிட முடியாத அளவுக்கு பலவிவரங்களையும் சட்டசபையில் போட்டு உடைத்துள்ளது அதிமுக.

முதலில் சர்க்காரியா கமிஷனில் கருணாநிதியை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு பின்னர் அதுஇந்திராவின் தலையீட்டால் கலைக்கப்பட்ட விவரத்தை ஜெயலலிதா சொல்லித் தான் வெளியே தெரிந்திருக்கிறது.இது குறித்து பல சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒருமுறை கூட குறிப்பிட்டதில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது.

இது இளைய தலைமுறையைச் சேர்ந்த திமுக அனுதாபிகளுக்கே அதிரிச்சி தரும் விவரமாகும். தங்களால்விரும்பப்படும் தலைவர் இப்படிச் செய்தாரா என்பது படித்து முன்னேறி ஊழலுக்கு எதிராக கடும் கருத்துக்கள்கொண்ட இளைஞர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

அதே போல சென்னைக்கு கிருஷ்ணா நீர் வந்துவிட்டது எனக் கூறி மாபெரும் விழாவை கருணாநிதி நடத்தினார்.அனால், இப்போது அந்த கிருஷ்ணா நதி வாய்க்காலில் ஒரு சொட்டு ஈரம் கூட இல்லை. இது திமுகவை தங்கள்வீட்டுக் கட்சியாகக் கருதி வாக்களித்து வந்த சென்னை மக்களுக்கு செய்யப்பட்ட துரோகமாகவே கருதப்படுகிறது.

சென்னையில் குடங்களுடன் குடிநீருக்கு சைக்கிள்களிலும், டி.வி.எஸ்.-50 களிலும் நடுத்தர, ஏழை மக்கள்காலையில் அலுவலம் செல்லும் முன்னரும், ஆபிஸ் முடிந்து வீடு திரும்பிய பின்னரும் அலைந்து வருகின்றனர்.ஆனால், கிருஷ்ணா நீர் வந்துவிட்டது, இனி சென்னைக்கு தண்ணீர் பஞ்சம் இருக்காது என சுமார் 4 ஆண்டுகளுக்குமுன் கருணாநிதி கூறியது வலியுடன் நினைவுக்கு வருகிறது.

சென்னை மாநகராட்சிக்கு மேயர் போட்டியிட்ட அந்த ஆண்டில் கிருஷ்ணா நீர் வந்துவிட்டாக திமுக அரசு நடத்தியநாடகம் குறித்து சட்டசபையில் நடந்த விவாத விவரம்:

முதல்வர் ஜெயலலிதா: சென்னைக்கு கிருஷ்ணா நீர் வரவேயில்லை. உண்மையில் சென்னைக்கு வந்ததுபெண்ணற்றில் இருந்து வந்த நீர் தான். மழை காரணமாக கிடைத்த நீர் பெண்ணாற்றிலிருந்து கண்டலேறுஅணையில் தேக்கி வைக்கப்பட்டிருந்தது. கிருஷ்ணா நீர் என்று சொல்லி அதைத் தான் சென்னைக்கு கொண்டுவந்தார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+