நேபாள அரசர் குடும்ப படுகொலை ஏன்?
காட்மாண்டு:
நேபாள இளவரசர் திபேந்திரா தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொடுக்க அரசர் பீரேந்திரா மறுப்புதெரிவித்ததால் ஆத்திரமடைந்து குடும்பத்தினர் அனைவரையும் தீர்த்துக் கட்டினார் என்று தெரிய வந்துள்ளது.
நேபாள அரசர் பீரேந்திரா, அரசி ஐஸ்வர்யா உள்பட அவரது குடும்பத்தினர் அரசரின் மகன் திபேந்திராவால்சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து நேபாளத்தின் புதிய அரசராக ஞானேந்திரா பதவியேற்றுக் கொள்கிறார்.
அவசரக் கூட்டம்:
படுகொலை சம்பவத்தையடுத்து நேபாள அரண்மனையில் அவசரக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் நேபாளராஜ குடும்பத்தில் நடந்த துயரமான சம்பவத்தையடுத்து அரச குடும்பத்தைச் சேர்ந்த ஞானேந்திரா (52) வைநேபாளத்தின் அரசராக்குவது என முடிவெடுக்கப்பட்டது.
நேபாளத்தின் புதிய அரசர் ஞானேந்திரா தற்காலிக அரசராக நீடிப்பார் என்றும் அக்கூட்டத்தில்முடிவெடுக்கப்பட்டது.
திபேந்திராவால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் பெயர் வருமாறு:
அரசர் பீரேந்திரா பிக்ரம்(55), அரசி ஐஸ்வர்யா (52), அரசியின் தாய் ரத்னா, அரசரின் இளைய மகன் நிரஞ்சன்,அரசரின் இரண்டு சகோதரிகள் சாரதா, சாந்தி அரசரின் மருமகன் காட்கா, காட்காவின் குழந்தை ஜெயந்திஆகயோர் உயிரிழந்தனர்.
அரச குடும்பத்தை அழித்த காதல்:
திபேந்திரா அரண்மனை குடும்பம் அல்லாத சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் தீவிரமாகக்காதலித்தார். அந்தப் பெண்ணின் தாய் இந்தியாவைச் சேர்ந்தவர். தந்தை நேபாளத்திலுள்ள ராணா என்ற பிரிவைசேர்ந்தவர்.
இவர்களது மகளைத் திருமணம் செய்து கொள்ள ராஜ குடும்பத்தினர் அனுமதி அளிக்கவில்லை. தன் காதலுக்குவீட்டில் கடுமையான எதிர்ப்பு இருந்ததால் மனமுடைந்த திபேந்திரா பல நாட்களாக மனச்சோர்வுடன் இருந்தார்.
வெள்ளிக்கிழமை அரண்மனையில் நடந்த விருந்தின் போது மீண்டும் திபேந்திராவின் திருமணம் குறித்து சர்ச்சைஎழுந்தது. அப்போதும் அரசர் பீரேந்திரா, திபேந்திராவின் காதலுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து, ராஜ குடும்பத்தையே அழித்தார் திபேந்திரா. தன்னையும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட திபேந்திராஉயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தொடர்ந்து கோமாநிலையில் இருக்கிறார்.
புதிய அரசராகிறார் ஞானேந்திரா:
நேபாள அரச குடும்ப வழக்கப்படி, புதிய அரசர் அறிவிக்கப்பட்டபின்தான், இறந்த அரசருக்கும், அவரதுகுடும்பத்தாருக்கும் இறுதிச்சடங்குகள் நடத்தப்படும்.
இதையடுத்து புதிய அரசராக ஞானேந்திராவின் பெயர் அறிவிக்கப்பட்டது. இறந்த அரசர் மற்றும் அவரதுகுடும்பத்தாருக்கு சனிக்கிழமை இறுதிச்சடங்கு நடத்தப்படுகிறது.
இறுதிச்சடங்கு பாசுபதி ஆர்யாகாட் அருகேயுள்ள பாக்மதி ஆற்றில் நடக்கிறது.
முன்னதாக ராஜ குடும்பம் படுகொலை செய்யப்பட்டதையடுத்து காட்மாண்டு நகர் முழுவதும் போலீஸார்குவிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் காட்மாண்டுவில் உள்ள மக்கள் சோகமே உருவாகக் காணப்படுகின்றனர்.
பெரும்பாலான மக்கள் திபேந்திராவின் இந்த செயலை நம்பவும் முடியாமல், கிரகிக்கவும் முடியாமல் தவித்தபடிஉள்ளனர்.
காட்மாண்டு நகர் முழுவதும் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களுக்குவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசரின் சகோதரர்:
நேபாளத்தின் தற்காலிக அரசராக சுட்டுக் கொல்லப்பட்ட அரசர் பீரேந்திராவின் சகோதரர் ஞானேந்திராநியமிக்கப்பட்டுள்ளார்.
நோபாளத்தின் புதிய தற்காலிக அரசராக ஞானேந்திராவையும், அடுத்த அரசராக திபேந்திராவையும் நியமிப்பதுஎன நேபாள நாடாளுமன்றத்தில் முடிவெடுக்கப்பட்டது.
திபேந்திரா உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications