நாகர்கோவிலில் உழவர் சந்தையை மூட கடும் எதிர்ப்பு
வடசேரி (நாகர்கோவில்):
கன்னியாக்குமரி மாவட்டம் வடசேரியில் உழவர் சந்தையை மூடக்கூடாது என்று கூறி உழவர்கள் கடும் எதிர்ப்புதெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குமரி மாவட்டத்தில் மயிலாடியில் ஒரு உழவர் சந்தையும், வடசேரியில் ஒரு உழவர் சந்தையும் செயல்பட்டுவருகிறது.
இதற்கிடையே தமிழ்நாட்டில் செயல்படாத உழவர் சந்தைகள் மூடப்படும் என்று முதல்வர் ஜெயலலிதாசட்டசபையில் அறிவித்தார்.
இதையடுத்து வடசேரி உழவர் சந்தையை மூடப்போவதாக விவசாயிகளிடையே வதந்தி பரவியது.
இதையடுத்து வடசேரி உழவர் சந்தை வாசலில் விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த காய்கறிகளுடன்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து வடசேரி போலீஸார் அங்குள்ள உழவர் சந்தைக்கு வந்து 100 க்கும் மேற்பட்ட விவசாயிகளைபோலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
மறியல் செய்யக்கூடாது. ஆர்ப்பாட்டம் மட்டுமே நடத்தலாம் என்று எழுதி வாங்கிக் கொண்டு விவசாயிகளைவிடுவித்தனர்.
இதையடுத்து, சுமார் மூன்றரை மணி நேரம் விவசாயிகள் மூடாதே, மூடாதே உழவர் சந்தையை மூடாதே!விவசாயிகள் வயிற்றில் அடிக்காதே! என்று கூறி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் கலைந்து சென்று தாங்கள்கொண்டு வந்திருந்த காய்கறிகளை விற்பனை செய்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications