ஜெ.பழிவாங்குகிறார்: தே.ஜ.கூட்டணி கண்டனம்
சென்னை:
தற்போது பதவியேற்றுள்ள ஜெயலலிதா தலைமையிலான அரசு வேண்டுமென்றே பழிவாங்கும் நோக்கத்தில்செயல்படுகிறது என்று தமிழகத் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
வெள்ளிக்கிழமை சென்னை அறிவாலயத்தில் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் இதுதெரிவிக்கப்பட்டது.
சட்டசபைத் தேர்தலில் இக்கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த இக்கூட்டம், காவல்துறைதுணையோடு, நெருக்கடி காலத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் போல இந்த அரசு மேற்கொள்ளும்நடவடிக்கைகளைக் கண்டித்தது.
இத்தகைய போக்கு நீடித்தால், மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் கூடி அடுத்தகட்ட நடவடிக்கைஎடுப்பார்கள் என்றும் இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுக, தமாகா ஜனநாயகப் பேரவை, எம்ஜிஆர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், எம்ஜிஆர் அதிமுக, தொண்டர்காங்கிரஸ், மக்கள் தமிழ் தேசம், புதிய தமிழகம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், தமிழ் பாமக ஆகிய கட்சிகளைச்சேர்ந்த தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications