வங்கதேச குண்டு வெடிப்பில் 9 பேர் பலி
டாக்கா:
வங்கதேசத்தில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை காலை நடந்தகுண்டு வெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டனர். 13 பேர் காயமடைந்தனர்.
வங்கதேசத்தின் கோபால் கஞ்ச் மாவட்டத்திலுள்ள கத்தோலிக்க மிஷன் சர்ச்சில்ஞாயிற்றுக்கிழமை காலை பிரார்த்தனைக் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது குண்டுவெடித்ததாகப் போலீஸார் கூறினர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வெடிகுண்டு வெடித்ததைத் தொடர்ந்து அப்பகுதிக்கு வெடிகுண்டுநிபுணர்களும்,போலீசாரும் விரைந்துள்ளனர்.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்த வெடிகுண்டு விபத்தை வன்மையாககண்டித்துள்ளார். இந்த வெடிகுண்டு சம்பவத்திற்கு காரணமான குற்றவாளிகளைக்கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் போலீசாரை கேட்டுக் கொண்டுள்ளார்.
வங்கதேசத்தின் புத்தாண்டு தினத்தையொட்டி ஏப்ரல் மாதம் 14ம் தேதி ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த விழா ஒன்றில் வெடிகுண்டு விபத்தில் 8 பேர் கொல்லப்பட்டனர்என்பது குறிப்பிடத்சதக்கது.
கடந்த ஆண்டு ஹசீனாவின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் அவர் கலந்துகொள்ளவிருந்த கூட்டம் நடைபெறவிருந்த இடத்தில் வெடிகுண்டு வெடித்ததும்நினைவுகூறத்தக்கது.
ஹசீனாவுக்கும், அவரது சகோதரி ஷேக் ரெகானாவுக்கும் வங்கதேச அரசு பாதுகாப்பைபலப்படுத்தியுள்ளது.
யு.என்.ஐ.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications