நேபாள அரசர் குடும்ப கொலைகள்: புதிய தகவல்
காத்மாண்டு:
நேபாள மன்னர் குடும்பத்தினரை இளவரசர் பிரேந்திரா சுடவில்லை. துப்பாக்கிஎதிர்பாராத விதமாகத்தான் வெடித்தது என நேபாள நாட்டின் தற்காலிக மன்னரானஞானேந்திரா கூறியுள்ளார்.
இதனால் நேபாள மன்னர் கொலை வழக்கில் நீடித்து வரும் குழப்பம் மேலும்அதிகரித்துள்ளது.
நேபாள மன்னர் பிரேந்திரா, அவரது மனைவி ஐஸ்வர்யா உள்ளிட்ட மன்னர்குடும்பத்தினர் 11 பேர் இளவரசர் பிரேந்திராவால் சனிக்கிழமை கொல்லப்பட்டனர்.பின்னர் பிரேந்திரா தன்னைத்தானே சுட்டுக் கொண்டார்.
இந்த கொலை பற்றி பல செய்திகள் வந்தன. தனக்கு பிடிக்காத பெண்ணை தனக்குமணம் செய்து வைக்க முயற்சித்ததால் கோபம் கொண்ட பிரேந்திரா மன்னர்குடும்பத்தை சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது.
மீண்டும் மன்னர் ஆட்சியை நேபாளத்தில் ஏற்படுத்த வேண்டும் என பிரேந்திராவற்புறுத்தியதாகவும், அதற்கு மன்னர் ஒப்புக் கொள்ளாததால் அவர்கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்க மன்னரும், ராணியும்ஜோதிடத்தைக் காரணம் காட்டி மறுத்ததால் பிரேந்திரா சுட்டுக் கொன்றார் என்றும்கூறப்படுகிறது
இந்தக் குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில்,நேபாளத்தின் தற்காலிக மன்னராகபொறுப்பேற்றுள்ள ஞானேந்திரா கூறுகையில், துப்பாக்கி எதிர்பாராத விதமாகவெடித்ததால்தான் மன்னர் குடும்பத்தினர் கொல்லப்பட்டனர். மேலும் குண்டுக்காயம்பட்டவர்கள் ராணுவ மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்குதான் அவர்கள்இறந்தனர் என கூறியுள்ளார்.
இது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மன்னரையும், ராணியையும்,மன்னர்குடும்பத்தினரையும சுட்டுக் கொன்று, தன்னையும் சுட்டுக் கொன்ற பிரேந்திராஇன்னமும் கோமாவில் இருந்து வருவதால், ஞானேந்திரா தற்காலிக மன்னராகநியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோமாவில் இருக்கும் பிரேந்திராவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்இன்னும் அபாய கட்டத்தை தாண்டவில்லை என்றும் கூறப்படுகிறது.
இவர் உயிர் பிழைத்த வந்தால் உண்மைகள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொல்லப்பட்ட மன்னர் குடும்பத்தினரின் உடல்கள் நேற்று நேபாளத்தில் சனிக்கிழமைநேபாளாவில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அவர்கள் உடல்கள்எரியூட்டப்பட்டன. ஏராளமான மக்கள் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications