தேவாரம் நியமனத்திற்கு எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

அதிரடிப்படைத் தலைவராக தேவாரத்தை நியமிக்க தமிழ்நாடு பழங்குடியின மக்கள்நலச் சங்கம் எதிர்ப்புத் தெவித்துள்ளது.

இது குறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் குணசேகரன் நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியுள்ளதாவது:

கடந்த முறை அதிரடிப்படையின் தலைவராக தேவாரம் இருந்தபோது பல மனிதஉரிமை மீறல் சம்பவங்கள் நடந்தன. இந்த சம்பவங்களால் பழங்குடியின மக்கள்பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

விசாரணை என்ற பெயரில் பலரையும் அழைத்துச் சென்று அதிரடிப்படையினர் சுட்டுக்கொன்றனர். பெண்களைப் பலாத்காரம் செய்தனர். இதனால் 120 பெண்கள்இப்போதும் மனநிலை பாதிப்பில் உள்ளனர்.

மீண்டும் தேவாரம் அதிரடிப்படையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர்நடுநிலையுடன் செயல்பட மாட்டார்.

தேவராத்தை விட திறமையான அதிகாரிகள் ஏராளமானோர் உள்ளனர். அவர்களைஅதிரடிப்படையின் தலைவராக நியமிக்க வேண்டும். மீண்டும் தேவாரம்நியமிக்கப்பட்டால், அவர் பழிவாங்கும் நோக்குடன் செயல்படுவார்.

கடந்த கால நடைமுறையை அவர் பின்பற்றினால், மோசமான பின் விளைவுகள்ஏற்படும். வீரப்பன் தேடும் வேட்டையில் புதிய பாணி பின்பற்றப்பட வேண்டும்.

நீதிபதி சதாசிவம் தலைமையிலான விசாரணைக் கமிஷன், விசாரணை மேற்கொள்ளவிதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பழங்குடியினமக்களுக்கு நிவாரணம் கிடைக்க வழி செய்ய வேண்டும் என்றார் குணசேகரன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+