அனாதை குழந்தைகளுக்கு அன்பு இல்லம் ஆதரவு
கோவை:
குடும்பப் பிரச்னையால் இரு பெண் குழந்தைகளை அனாதையாக விட்டுச் சென்றார்தாய். கோவை அன்பு இல்லம் அக்குழந்தைகளை அரவணைத்துக் கொண்டுள்ளது.
திருப்பூரில் நேதாஜி நகரில் கிளினிக் வைத்திருக்கிறார் டாக்டர் விஜயலட்சுமி. இவரதுகிளினிக்கிற்கு தனலட்சுமி (30) என்ற பெண், தனது இரு குழந்தைகளை அழைத்துக்கொண்டு வந்தார்.
அவர்கள் இருவருக்கும் தலையில் காயம் இருந்தது. இந்தக் காயத்திற்கு விஜயலட்சுமிமருந்து போட்டுக் கொண்டிருந்தபோது, வெளியிலிருந்த தனலட்சுமி திடீரெனமாயமாகி விட்டார்.
சிறிது நேரத்தில் திரும்பி விடுவார் என அவர் காத்திருந்தார். ஆனால், வெகுநேரம்ஆகியும் தனலட்சுமி திரும்வில்லை. இதனால், விஜயலட்சுமி கோவையில் உள்ளகுழந்தைகள் பாதுகாப்பு இல்லத்திற்கு தகவல் கொடுத்தார்.
டான்பாஸ்கோ அன்பு இல்லம் என அழைக்கப்படும் இந்த இல்லம், இருகுழந்தைகளையும் அழைத்துச் சென்றது. பின்னர், இக் குழந்தைகளிடம் அன்புஇல்லத்தின் தலைவர் அருள் ஜான் விசாரித்தபோது, தங்களது பெயர் கவிதா (8),சரண்யா (6) எனவும் அக்குழந்தைகள் கூறியுள்ளனர். தங்களுடைய தாயை தந்தைஅடித்துத் துன்புறுத்துவதாகவும், அப்போது தங்களுக்கும் அடி விழும் எனக்கூறியுள்னர்.
தங்களுடைய தந்தை டெய்லராகப் பணியாற்றுவதாகத் தெரிவித்துள்ளனர். இக்குழந்தைகள் திருப்பூரில் எப்பகுதியில் வசித்து வருகிறோம், பெற்றோர் யார்என்பதைத் தெரிவிக்க மறுத்து வருகின்றனர். அவ்வாறு தெரிவித்தால், தங்களதுபெற்றோர்களுடன் சேர்த்து வைக்கப்பட்டு விடுவோம் என்ற பயம் அவர்களுக்குஏற்பட்டுள்ளது.
இதனால், குழந்தைகள் சரியான தகவலைக் கூற மறுப்பது வேதனைக்குரியது எனத்தெரிவித்தார் ஜான்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications