மதானியை பார்க்க உறவினர்களுக்கு அனுமதி மறுப்பு
கோவை:
கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் கேரள மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் அப்துல்நாசர் மதானியைப் பார்க்க அவரது உறவினர்கள் அனுமதிக்கப்படவில்லை.
உரிய சிகிச்சை அளிக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என அவரது கட்சியினர் வற்புறுத்தி வருகின்றனர்.
கோவை குண்டு வெடிப்புச் சம்பவம் கடந்த 1998ம் ஆண்டு நடந்தது. அப்போது இந்த குண்டு வெடிப்புச்சம்பவத்தில் கேரள மக்கள் ஜனநாயக முன்னணியின் தலைவர் அப்துல் நாசர் மதானிக்கும் தொடர்புள்ளதாக கூறிகைது செய்யப்பட்டார்.
மதானி கோவை சிறையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறார். தற்போது குண்டு வெடிப்புவழக்கு நடந்து வருகிறது.
இந்த நிலையில், அவருக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டது. வெளி நோயாளியாகச் சிகிச்சை பெற்று வந்தஅவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வருகிறார். இவரைக் காணஅவரது மனைவி மற்றும் குழந்தைகள் வந்தனர். ஆனால், மருத்துவமனையில் சென்று பார்க்க அவர்கள்அனுமதிக்கப்படவில்லை.
இதையடுத்து கேரள மக்கள் ஜனநாயக் கட்சியின் பொதுச் செயலர் பூந்துறை சிராஜ் நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:
எங்களது கட்சித் தலைவர் எந்த வித விசாரணையுமின்றி சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். கடந்த 3ஆண்டுகளாக ஒரு வழக்கைச் சந்திக்க உள்ளே இருப்பது இந்திய வரலாற்றிலேயே இல்லாதது. ஏற்கனவேஅவருக்கு பல வகைகளில் உடல் நலம் குறைந்துள்ளார். நெஞ்சுவலி, முதுகு வலி என பல்வேறு பிரச்னைகளால்சிக்கித் தவித்து வருகிறார்.
தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி கூட பத்திரிக்கைகளின் மூலம் தான் தெரிந்ததுகொண்டோம். எனவே, அவரது உயிருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாத வகையில் உரிய சிகிச்சை அளிக்கவேண்டும் எனத் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications