ஓட்டுச்சீட்டுக்கு இந்தியா "குட் பை"
டெல்லி:
நாட்டிலுள்ள 6.5 கோடி வாக்காளர்கள் இனி ஓட்டுச் சீட்டுக்கு ஒரு "குட் பை"சொல்லிவிட்டு, மின் வாக்குப்பதிவு எந்திரத்துக்கு "ஹாய்" சொல்லும் காலம்நெருங்கிவிட்டது என்று தலைமைத் தேர்தல் கமிஷனர் எம்.எஸ். கில் கூறினார்.
வரும் ஜூன் 14ஆம் தேதியுடன் தன்னுடைய பதவிக் காலத்தை நிறைவுசெய்யவிருக்கும் கில் நிருபர்களிடம் பேசும்போது:
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் முழுக்க முழுக்க மின் வாக்குப்பதிவுஎந்திரங்கள்தான் பயன்படுத்தப்படும். கடந்த 1999-நாடாளுமன்றத் தேர்தலில் 10சதவிகித மக்கள்தான் மின் வாக்குப்பதிவு எந்திரங்களைப் பயன்படுத்தினார்கள்.
கடந்த தேர்தல்களில் பயன்படுத்தப்பட்ட வாக்குச் சீட்டுகளினால், ஏகப்பட்ட வாக்குகள்செல்லாமல் போயின. இது தவிர, அனைத்து வாக்குச்சீட்டுகளையும் ஒவ்வொன்றாகஎண்ண வேண்டிய நிலை ஏற்பட்டதால், அதிக நேரமும் விரயமாகியது. தேர்தல்முடிவுகளை அறிவிப்பதிலும் காலதாமதங்கள் ஏற்பட்டன.
1980-களில் ஒருசில தொகுதிகளில் மின் வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. அப்போது ஒரு மின் வாக்குப்பதிவு எந்திரத்தின் விலை ரூ.750 மட்டுமே. பலகாரணங்களினால் இவற்றைப் பயன்படுத்துவது நிறுத்தப்பட்டது. அனைத்துஎந்திரங்களும் கிடப்பில் போடப்பட்டன.
1995-ல் நான் பதவியேற்ற பிறகு, அவற்றையெல்லாம் தூசுதட்டி எடுத்தேன். புதிதாக3 லட்சம் மின் வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு ஆர்டர் செய்தேன். தற்போது ஒரு மின்வாக்குப்பதிவு எந்திரத்தின் விலை ரூ.12,000 வரை ஆகிறது.
அதற்குப் பிறகு, கடந்த 1998 நாடாளுமன்றத் தேர்தலில்தான், மீண்டும் மின்வாக்குப்பதிவு எந்திரங்கள் பரிசோதனை ரீதியாக அறிமுகப்படுத்தப்பட்டன.தொடர்ந்து நடந்த பல மாநில சட்டசபைத் தேர்தல்களிலும் மின் வாக்குப்பதிவுஎந்திரங்களே பயன்படுத்தப்பட்டன.
கடந்த மே 10ஆம் தேதி, அஸ்ஸாம் தவிர, 4 மாநிலங்களில் நடந்த சட்டசபைத்தேர்தல்களில் முழுக்க முழுக்க மின் வாக்குப்பதிவு எந்திரங்களே பயன்படுத்தப்பட்டன.இம்முறை இச்சோதனை முழு வெற்றி பெற்றது.
வாக்கு எண்ணிக்கைகள் வெகுவேகமாக எண்ணப்பட்டு, 3 முதல் 5 மணிநேரங்களுக்குள்ளாகவே முழு முடிவுகளும் தெரிவிக்கப்பட்டு விட்டன. இது ஒருபெரிய வெற்றி மட்டுமின்றி, மாபெரும் சாதனையாகவும் கருதப்படுகிறது.
மின் வாக்குப்பதிவு எந்திரங்களிலும் வாக்காளர்களின் பெயர்களும் அவர்கள் சார்ந்தகட்சிச் சின்னங்களும் இடம் பெற்றிருக்கும். தவிர, ஒரு பட்டனை அமுக்கினால்மட்டுமே போதும்; வாக்குப்பதிவு முடிந்துவிடும்.
முன்பு போல ஒரு விரல்நீள வாக்குப்பதிவு முத்திரை, இங்க் இதற்கெல்லாம் இப்போதுதேவையில்லாமல் போய்விட்டது. செலவும் குறைந்துவிட்டது. இதனால் கல்வியறிவுஇல்லாதவர்கள்கூட மிக எளிதாக வாக்களிக்க முடியும்.
மின் வாக்குப்பதிவு எந்திரத்தில் கள்ள ஓட்டு, செல்லாத ஓட்டு என்ற பேச்சுக்கேஇடமில்லை. முன்பு பயன்படுத்தியது போல, செய்தித்தாள் போன்ற பெரிய பெரியவாக்குச் சீட்டுகளுக்கும் இனி அவசியம் இருக்காது. அந்த வாக்குச் சீட்டில்முத்திரையைப் பதித்து, அதை நான்காக, எட்டாக மடித்து ஓட்டுப் பெட்டிக்குள்திணிக்கவேண்டிய அவசியமும் இல்லாமல் போய்விட்டது.
மின் வாக்குப்பதிவு எந்திரத்தால், ஆரம்பத்தில் பல எதிர்க் கட்சிகளுக்கும் நான் பதில்சொல்ல வேண்டிய கட்டாயம் இருந்து வந்தது. பலர் என்னை முட்டாள் என்றுகூடத்திட்டித் தீர்த்தார்கள். இந்த எந்திரத்தை அறிமுகப்படுத்திய ஒரே காரணத்திற்காக நான்என் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கூறிப் போராடினார்கள்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கூட, ஆரம்பத்தில் மின் வாக்குப்பதிவு எந்திரங்கள்வேலை செய்யவில்லை என்று "பலத்த குரலில்" புகார் கூறினார். அவருக்குச் சாதகமாகதேர்தல் முடிவுகள் வர ஆரம்பித்ததும், இதைப் பற்றி மூச்சே விடவில்லை.
ஆனால் மக்கள் தீர்ப்பு சில அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும்சாதகமாகவே அமைந்துவிட்டது. ஒரு மிகப் பெரிய ஜனநாயக நாட்டுக்கு இதுவும்ஒரு பெரிய ஜனநாயக வெற்றிதான் என்றார் 65 வயதை நிறைவு செய்யும் கில்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications