கருணாநிதி பிறந்தநாள் விழாவில் திமுக தொண்டர் மரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழாவில் கூட்டநெரிசலில் சிக்கி திமுக தொண்டர் மரணமடைந்தார்.

அவர் பெயர் தனுஷ்கோடி. வயது 48. மதுரை மாநகர் முதலாவது வட்ட திமுக பிரதிநிதியாக இருந்தவர்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 78 வது பிறந்தநாள் விழா அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமைகொண்டாடப்பட்டது.

கருணாநிதிக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொல்வதற்காக ஏராளமான திமுக தொண்டர்கள் காலை 8.30 மணி முதலேஅண்ணா அறிவாலயத்தில் குவியத் தொடங்கினர்.

வாழ்த்து கூற வந்த தொண்டர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் நின்று வாழ்த்துக் கூறி விட்டுச் சென்றனர்.

அப்போது மதுரையைச் சேர்ந்த தனுஷ்கோடி என்ற தொண்டரும் வாழ்த்துக் கூறுவதற்காக வரிசையில் நின்றுகொண்டிருந்தார். நீண்ட நேரம் வரிசையில் நின்றதால் தனுஷ்கோடி மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்குத்தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

மரணமடைந்த தனுஷ்கோடிக்கு புவனேஸ்வரி என்ற மனைவியும், விஜயகுமார், மகேஷ் என்ற மகன்களும்,சிவகாமி என்ற மகளும் உள்ளனர். இவர்களில் சிவகாமிக்கு மட்டும் திருமணமாகி விட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+