ஜெ. இன்று டெல்லி பயணம்: கருணாநிதி மீது வழக்கு தொடர அனுமதி?
சென்னை:
தமிழக முதல்வராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக திங்கள்கிழமை டெல்லி சென்று பிரதமர் வாஜ்பாயைச்சந்திக்கவிருக்கிறார் ஜெயலலிதா.
பொதுவாக, முதல்வராகப் பதவி ஏற்பவர்கள் மரியாதை நிமித்தமாக பிரதமரைச் சந்திப்பது வழக்கம். அதன்படி,தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமரைச் சந்திக்க திங்கள்கிழமை மாலை டெல்லி புறப்படுகிறார்.செவ்வாய்க்கிழமை காலை அவர் பிரதமரைச் சந்திப்பார்.
மேலும், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, உள்துறை அமைச்சர் அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திஆகியோரையும் ஜெயலலிதா சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது.
ஜெயலலிதாவின் இந்த டெல்லி பயணம் மரியாதை நிமித்தமானதுதான் என்று சொன்னாலும், இப்பயணம்அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருக்கப் போவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
சர்க்காரியா கமிஷன் அடிப்படையில், ஜெயலலிதாவின் முக்கிய அரசியல் எதிரியும் முன்னாள் முதல்வருமானகருணாநிதி மேல் வழக்கு தொடர, அவர் பிரதமரின் அனுமதியைக் கேட்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா மீதும் அவரைச் சுற்றி இருந்தவர்கள் மீதும், தனி நீதிமன்றங்கள்ஏற்படுத்தி, பல்வேறு ஊழல் வழக்குகளைப் போட்டு சிறையில் அடைத்தார் கருணாநிதி.
இவற்றுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக, தி.மு.க.வின் மீது மட்டுமில்லாமல், அவருடைய குடும்பத்தினர்மீதும் ஊழல் வழக்குகளைப் போடுவதற்கு ஆயத்தமாகி வருகிறார் ஜெயலலிதா. இதற்காக அவர் பிரதமரின்அனுமதியைக் கோரலாம் என்று கூறப்படுகிறது.
தவிர, பா.ஜ.க.வுடன் இணக்கமான உறவைப் புதுப்பித்துக் கொள்ளவும், மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்அங்கம் வகிக்கவும் ஜெயலலிதா நினைத்துக் கொண்டிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம்
முதல்வர் ஜெயலலிதா டெல்லி செல்லும் நிலையில், தி.மு.க.வின் பொதுக்குழுக் கூட்டம் கருணாநிதி தலைமையில்சென்னையில் திங்கள்கிழமை மாலை நடக்கிறது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே தி.மு.க.வினர்தொடர்ந்து கைது செய்யப்படுவது உள்ளிட்ட பல விவாதங்கள் பற்றி இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்றுதெரிகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications