கார்கில் போர்: இந்திய கமாண்டர் நீக்கம்
டெல்லி:
1999 ம் ஆண்டு இந்திய, பாகிஸ்தான் எல்லையான கார்கிலில் போர் நடந்து கொண்டிருந்த போது பணியில்கவனக்குறைவாக இருந்தது தொடர்பாக ராணுவ பிரிகேடியர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
இதுகுறித்து இந்திய ராணுவ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 1999 ம் ஆண்டு கார்கில் போர் நடந்துகொண்டிருந்த போது பணியில் கவனக்குறைவாக இருந்தது தொடர்பாக பிரிகேடியர் சுரேந்தர் சிங் தற்போது தனதுபதவியிலிருந்து நீக்கப்படுகிறார்.
இந்திய ராணுவத்தின் மேற்குப்பிரிவில் பிரிகேடியராக சுரேந்தர் சிங் பணிபுரிந்து வருகிறார். அந்தப்பதவியிலிருந்து அவர் நீக்கப்படுகிறார். இருப்பினும் அவருக்கு ஓய்வூதிய சலுகைகள் அனைத்தும் அளிக்கப்படும்.
கார்கில் போரின் போது, பணியில் கவனக்குறைவாக இருந்த காரணத்தால் அவரை நீக்கும்படி, ராணுவ அதிகாரிகூறியதை அடுத்து இவர் அப்பதவியிலிருந்து நீக்கப்படுகிறார்.
முன்னதாக, பணியில் கவனக்குறைவாக இருந்தது தொடர்பாக அவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் ஷோ காஸ்நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு சுரேந்தர் சிங் ஏற்றுக் கொள்ளும்படியான விளக்கம் அளிக்கவில்லை.
ஏற்கனவே கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சிங், கார்கில் கமாண்டர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதுமிகப்பெரிய சர்ச்சைக்குரிய விஷயமாக மாறியது.
இருப்பினும் கார்கில் போர் தொடர்பான ரகசிய தஸ்தாவேஜூகளை பல பத்திரிக்கைகள் மற்றும் வாரஇதழ்களுக்குக் கொடுக்கப்பட்டதாக சிங் மேல் குற்றச்சாட்டு இருந்தது.
இந்தக் குற்றச்சாட்டுக்கு ராணுவம் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தது. முன்னதாக கார்கில் போரில் இந்தியா 500க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை இழந்தது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.


Click it and Unblock the Notifications
