ஜெயாவிடம் பணம் வாங்கினார் ராமதாஸ்: கருணாநிதி குற்றச்சாட்டு
சென்னை:
பணத்தை வாங்கிக் கொண்டு ஜெயலலிதாவுடன் சேர்ந்த ராமதாஸ் மற்றும் ஜெயலலிதாவுடன் ரகசிய உடன்பாடுசெய்து கொண்டு கடைசி நேரத்தில் திமுகவை விட்டு வெளியேறிய வைகோ ஆகியோரால் தான் திமுக பெரும்தோல்வியைத் தழுவியது என முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறினார்.
திமுகவின் தேர்தல் தோல்வி குறித்து சென்னையில் திங்கள்கிழமை நடந்த திமுக பொதுக் குழுக் கூட்டத்தில் அவர்பேசுகையில்,
ஜெயலலிதா தனது பண பலத்தைக் கொண்டு பெரிய கட்சிகள் கொண்ட கூட்டணியை அமைத்தார். அது அவருக்குவாழ்வா சாவா போராட்டம் என்பதால் பணத்தை வாரி இறைத்தார்.
வைகோ கடந்த 8 மாதங்களுக்கு முன்பே ஜெயலலிதாவுடன் ரகசிய உடன்பாடு செய்து கொண்டார். கடைசிநேரத்தில் சில ஏற்க முடியாத நிபந்தனைகளைப் போட்டுவிட்டு திமுக கூட்டணியை விட்டு வெளியேறுவேன் எனஜெயலலிதாவுக்கு வைகோ உறுதி மொழி கொடுத்திருந்தார். அதை கடைசி நேரத்தில் செய்தும் காட்டினார்.
மதிமுக நமது கூட்டணியில் இருந்திருந்தால் நிச்சயம் 10 இடங்களிலாவது வென்றிருக்கும். திமுகவும் கூடுதலாகசுமார் 10 இடங்களில் அதிகம் வென்றிருக்கும்.
பணத்துக்காகத் தான் ராமதாஸ் திமுகவை விட்டுவிட்டு ஜெயலலிதாவிடம் போனார். அரசனை (ஜெயலலிதாவை)நம்பி புருசனை (திமுகவை) கைவிட்டவர் ராமதாஸ்.
இந்தக் கூட்டத்தில் தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்கிறோம். உறுப்பினர்கள் மனதில் உள்ளதைவெளிப்படையாகப் பேசலாம். அதற்காக ஒருவர் மீது ஒருவர் மண்ணை வாரி தூற்ற வேண்டாம் என்றார்கருணாநிதி.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications