வீழ்ந்திருக்கிறோம், மீண்டும் எழுவோம்: கருணாநிதி
சென்னை:
போர்க்களத்தில் தற்காலிகமாகத்தான் வீழ்ந்திருக்கிறோம். மீண்டும் திமுக உத்வேகத்துடன் எழும் என்று முன்னாள்முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதி கூறியுள்ளார்.
கருணாநிதியின் 78-வது பிறந்த நாளையொட்டி சென்னை தி.நகர் பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமைஇரவு பொதுக் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு கருணாநிதி பேசியதாவது:
ஆட்சியை இழந்து விட்ட நேரத்தில் பிறந்த நாள் விழா தேவைதானா என்றேன். ஆனால் உடன்பிறப்புகள் வழக்கம்போல விழாவைக் கொண்டாட வேண்டும் என்றனர். ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது வாழ்த்த வந்தவர்கள்இப்போதும் வருவார்களா என்ற ஐயம் கொண்டேன். ஆனால் ஆட்சி போனால் என்ன, உன் திருமுகத்தைக் காணதுடித்து நிற்கிறோம் என்று தொண்டர்கள் குழுமி நிற்கின்றனர்.
மதுரையைச் சேர்ந்த தனுஷ்கோடி அறிவாலய வளாகத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி மாண்டார் என்ற துயரச் செய்திநெஞ்சுக்குள் நெருஞ்சியாய் தைத்துக் கொண்டிருக்கிறது. பிறந்த நாள் விழாவின்போது கழக வளர்ச்சி நிதியாக ரூ.2.20 லட்சம் வசூலாகியுள்ளது. அதிலிருந்து கணிசமான தொகை தனுஷ்கோடி குடும்பத்திற்கு வழங்கப்படும்.
இந்தப் போர்க்களத்தில் நாம் தற்காலிகமாகத்தான் விழுந்திருக்கிறோம். முழுமையாக விழுந்து விடவில்லை.எனவே மீண்டும் எழுவோம் என்ற நம்பிக்கையுடன் போர்க்களத்தில் குதிப்போம். ஆட்சி 6 மாதத்தில் கவிழும், 1வருடத்தில் கவிழும் என்று காத்திருக்க வேண்டாம். தேர்தல் தோல்வியால் ஏற்பட்ட புண்ணை ஆற்றவே 5 ஆண்டுபிடிக்கும்.
சட்டமன்றத்தில் ஜனநாயகம் கெட்டுக் கொண்டிருக்கிறது. நடுநிலையில் இருப்பவர்களே முதல்வர் பேசுவதுதான்சரி என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். சிவசண்முகம் பிள்ளை, சாம்பசிவ மூர்த்தி, பண்பாளர்பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் என பல சான்றோர்கள் சிறப்பாக நடத்திய சபை இது.
இன்னும் பத்து ஆண்டுகள் ஆட்சி புரிய தமிழக மக்கள் அனுமதித்திருந்தால் தமிழகம் மேலும் பயன்அடைந்திருக்கும். ஆனால் தமிழக மக்கள் தட்டி விட்டு விட்டார்கள். இந்தக் குறையைப் போக்க அவசரப்படாமல்,ஆத்திரப்படாமல் பொறுமையோடு அணுக வேண்டும் என்றார் கருணாநிதி.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications