கொசுத் தொல்லையில் சிக்கி தவிக்கும் இந்திய ராணுவ வீரர்கள்
க்வாபரி (அசாம்):
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் உள்ள ராணுவ வீரர்களை, தீவிரவாதிகளை விட மிகவும்கொடூரமாக கொசுக்கள் துன்புறுத்தி வருகின்றன.
கொசுக்களின் தொல்லையிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும்படி, ராணுவ வீரர்களுக்கு உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொசுக்கள் கடித்தால் மலேரியா போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் வரும் காரணத்தால் ராணுவ வீரர்களுக்குஎச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அசாமில் கடந்த 20 நாட்களில் மட்டும் கொசுக்களின் தொல்லையினால் பொதுமக்கள் 100 பேர்உயிரிழந்துள்ளனர். 10,000 க்கும் மேற்பட்டோர் மலேரியா மற்றும் இதர நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா-பூட்டான் எல்லைப்பகுதி கமாண்டர் கே.டி.ஷெல்லி கூறுகையில், அனைத்து ராணுவ வீரர்களுக்கும்மலேரியா போன்ற உயிர்க்கொல்லி நோய்களிலிருந்து தங்களைப் பாதுகாக்கும்படி, எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. மலேரியா தடுப்பு மாத்திரைகளை சாப்பிடும்படியும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொசுக்கள் தீண்டாமல் இருக்கும் வகையில் விநியோகப்பட்ட எண்ணெயை முதலில் ராணுவ வீரர்கள் தங்கள்உடம்பில் தடவிக் கொள்ள வேண்டும் என்றும், முழுக்கை சட்டையை மட்டுமே அணிய வேண்டும் என்றும் ராணுவவீரர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தூங்கும்போது தங்கள் கட்டிலில் கொசுவலை கட்டியே தூங்க வேண்டும் என்றும் ராணுவ வீரர்களுக்குஎச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுவாக அசாம், மேகாலயா மர்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் காலநிலை மாற்றத்தின்போது மலேரியா நோய்பரவும் அபாயம் உள்ளது. ஒவ்வொரு வருடமும் இந்த மாநிலங்களில் 500 க்கும் மேற்பட்டோர் மலேரியாநோயால் உயிரிழக்கின்றனர்.
அசாமில் கடந்த 5 வருடங்களில் மலேரியா நோய்க்கு 50 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள், புறக்காவல் படைவீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்றார்.
பூட்டான் எல்லைப்பகுதியில் பணிபுரியும் ராணுவ துணை கமாண்டர் ராஜ் குமார் சந்த் கூறுகையில், ஒவ்வொருசெவ்வாய்க்கிழமையும் பகல் உணவுக்குப்பிறகு சாப்பிடுவதற்காக மாத்திரைகள் ராணுவ வீரர்களுக்குவிநியோகிக்கப்பட்டுள்ளது. அதாவது மலேரியா நோய் தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்படுகின்றன.
அதே போல் ராணுவ வீரர்கள் மலேரியா தடுப்பு நடவடிக்கைகளை ஒழுங்காகப் பின்பற்றுகிறார்களா என்றுகண்காணிக்கும்படி, ராணுவ அதிகாரிகளுக்கு உத்தர விடப்பட்டுள்ளது என்றார்.
அசாம் மாநிலம் க்வாபரியைச் சுற்றியுள்ள 5,000 கிராம மக்கள் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.குறிப்பாக ராணுவ வீரர்களுக்கு இந்தப் பாதிப்பு அதிகமாக உள்ளது.
மலேரியா நோயிலிருந்து தங்களைப் பாதுகாத்து கொள்வது எப்படி? என்று ராணுவ வீரர்களுக்கு, ராணுவஅதிகாரிகள் பயிற்சி அளித்து வருகிறார்கள்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications