வறுமை: கள்ளக்காதலன், குழந்தையுடன் பெண் தற்கொலை
சென்னை:
பொன்மலையில் வறுமை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் ஆசிட் குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
பொன்மலையில் ஆட்டோ டிரைவராக வேலை செய்து வந்த ஒருவரின் மனைவி மகேஸ்வரி (28). இவருக்குபாலாஜி (10), அர்விந்த் (7) என்ற இரு மகன்கள் இருந்தனர்.
இந்த நிலையில் தன் கணவனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மகேஸ்வரிக்கு அதே பகுதியில் வசித்து வரும் ஹரி(30) என்ற கார் டிரைவருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.
இதையடுத்து மகேஸ்வரி, தன் இரண்டு மகன்களுடன் சில மாதங்களுக்கு முன் ஹரியுடன் சென்று விட்டார்.
இந்நிலையில் அன்றாட சாப்பாட்டுக்கே வழியின்றி ஹரி ரொம்பவும் கஷ்டப்பட்டார். பொருளாதார நெருக்கடியில்இருந்த அவரும், மகேஸ்வரியும் தற்கொலை செய்து கொண்டு விடுவது எனத் தீர்மானித்தனர்.
இதையடுத்து ஹரி, தனது கள்ளக்காதலி மகேஸ்வரி, அவரது மகன்கள் பாலாஜி மற்றும் அர்விந்த் ஆகியோருக்குஆசிட்டைக் கொடுத்து தானும் குடித்தார். இவர்களில் அர்விந்த் ஆசிடைக் குடிக்க மறுத்து விட்டார்.
ஆசிட் குடித்த ஹரி, மகேஸ்வரி மற்றும் பாலாஜி ஆகியோர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபலனின்றி உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications