Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நேபாளத்தில் இந்தியர்களுக்கு எதிராக போராட்டம்

Subscribe to Oneindia Tamil

காட்மாண்டு:

நேபாள இளவரசர் திபேந்திரா கையில் துப்பாக்கியுடன் இருப்பது போன்ற படத்துடன் அரசர் குடும்ப படுகொலைகுறித்தான செய்திகள் வெளியிட்டிருந்த டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழை ஞாயிற்றுக்கிழமை இரவுநேபாள மக்கள் தீயிட்டு எரித்தனர்.

நேபாள அரசர் குடும்ப படுகொலைக்கு திபேந்திராதான் காரணம் என்று முதலில் கூறப்பட்டது. தான் காதலித்ததேவயானி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள சம்மதிக்காத காரணத்தால் அரசர் பீரேந்திரா, அரசிஐஸ்வர்யா உள்பட அரசர் குடும்பத்தைச் சேர்ந்த 13 பேரை, வெள்ளிக்கிழமை இரவு சுட்டுக் கொன்றார் திபேந்திராஎன்று கூறப்பட்டது.

இதற்கிடையே இளவரசர் திபேந்திரா தன் குடும்பத்தினரை சுட்டுக் கொல்லவில்லையென்றும், தானியங்கி துப்பாக்கிவெடித்ததால் இந்தப் படுகொலைகள் நடந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

மன்னர் குடும்ப படுகொலைகளுக்கு பின்னணியில் இரு மாறுபட்ட காரணங்கள் கூறப்படுகின்றன.

இந்த நிலையில், இளவரசரின் காதலி தேவயானியின் தாய் இந்தியாவைச் சேர்ந்தவர் என்பதாலும், இந்தியப்பத்திரிக்கையான டைம்ஸ் ஆப் இந்தியாவில் இளவரசர் திபேந்திராவைக் குற்றவாளியாக்கி செய்திகள் வெளியாகிஇருந்த காரணத்தாலும் நேபாள மக்கள் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் நேபாளத்தில் வாழும் இந்தியர்களுக்குஎதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே நேபாள மக்களுக்கு எதிராக ஹிந்தி திரைப்பட நடிகர் ஹிருத்திக் க்ரோஷன் பேசினார் என்று வதந்திபரவியதால் நேபாளத்தில் கலவரம் வெடித்தது என்பது நினைவிருக்கலாம். இந்தச் சம்பவத்தால் நேபாளத்தில்வாழும் இந்தியர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.

இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை இரவு தலைநகர் காட்மாண்டு உள்பட பல இடங்களில் சென்று கொண்டிருந்தமோட்டார் சைக்கிள்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கலவரக்கும்பல் பல கடைகளை மூடும்படி கோஷமிட்டனர்.

அவர்கள், மன்னர் குடும்பம் வாழ்க! மன்னர் குடும்ப அழிவுக்கு வருத்தம் தெரிவிக்கிறோம்! என்று கோஷமிட்டனர்.

முன்னதாக, நேபாளத்தில் வாழும் மக்கள் இந்து மத முறைப்படி, நேபாள அரச குடும்பத்துக்கு அஞ்சலி செலுத்தும்வகையில் தலையை மொட்டை அடித்துக் கொண்டனர். அதுமட்டுமின்றி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

அரசியல் பார்வையாளர்கள் கூறுகையில், மறைந்த நேபாள அரச குடும்பத்துக்கு ஆதரவாக கலவரக்காரர்கள்போராட்டம் நடத்தி வருவது தொடர்ந்தால் அவர்கள் மேல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டி வரும். நெருக்கடிநிலையை பிரகடனப்படுத்த வேண்டிய சூழ்நிலையும் ஏற்படலாம் என்றனர்.

இதற்கிடையே, வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த அரசர் பீரேந்திராவின் உறவினர்கள் பலர்அவசர சிகிச்சை பிரிவிலிருந்து வேறு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று ராணுவ செய்திக்குறிப்புகள்தெரிவிக்கின்றன.

மேலும் நேபாளத்தின் புதிய அரசராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள ஞானேந்திராவின் மனைவி, அரசர்பீரேந்திராவின் சகோதரி ஷோபா, அரசரின் மருமகன் கவுரக், உறவினர் கேட்டகி செஸ்டர் ஆகியோர்உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டதைத் தொடர்ந்து அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்துபொதுப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மறைந்த அரசர் பீரேந்திராவின் சகோதரர் தீரேந்திராவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது.

அரசர் குடும்ப படுகொலைக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் அடுத்த 13 நாட்கள் திருமணம் உள்பட எந்தவிழாக்களையோ, விசேஷங்களையோ நடத்த வேண்டாம் என்று உள்துறை அமைச்சகம் பொதுமக்களிடம்கேட்டுக் கொண்டுள்ளது.

ஐ.ஏ.என்.எஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+