அதிமுக சுக்குநூறாகும்: தாமரைக்கனி சாபம்
ஸ்ரீவில்லிபுத்தூர்:
"ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றது செல்லாது என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரத்தான் போகிறது. அப்போதுஅதிமுக சுக்குநூறாக உடைந்து சிதறும்" என்று அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ தாமரைக்கனி சாபம்விடுத்துள்ளார்.
கொலைமிரட்டல் வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட தாமரைக்கனி, ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்நிலையத்திலேயே விடிய விடியத் தங்க வைக்கப்பட்டார். திமுக கரை வேட்டி அணிந்திருந்த தாமரைக்கனி பின்னர்நிருபர்களிடம் கூறியதாவது:
எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள், பிரமுகர்கள் மட்டுமல்லாமல் என்னையும் ஜெயலலிதா கைது செய்து வருகிறார்.விசாரணை இல்லாமலேயே கைது செய்வது கண்டிக்கத்தக்கது.
எம்ஜிஆர் கட்சியைத் துவங்கிய நாளிலிருந்து, அதிமுகவின் வளர்ச்சிக்காகவும், பொதுமக்களின் நலனுக்காகவும்நான் பாடுபட்டுள்ளேன். பலமுறை சிறை சென்றிருக்கிறேன். இன்று எம்ஜிஆர் அரசியல் வாரிசுகளுக்கெல்லாம்மதிப்பில்லை.
ஜெயில் எனக்குப் புதிதல்ல. அதிமுகவுக்காக உழைத்த என்னை கட்சிக்கே சம்பந்தம் இல்லாத ஜெயலலிதா பழிவாங்குகிறார். இதன் மூலம், அவர்தான் அழிவுப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார் என்று நன்றாகத்தெரிகிறது.
காலம் ஒருநாள் மாறும். ஜெயிலில் இருந்து வந்த பிறகு, பெரும் கூட்டத்துடன் நான் திமுகவில் இணைவேன்.
ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றது செல்லாது என்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரத்தான் போகிறது.அப்போது அதிமுக சுக்கு நூறாக உடையும் என்றார் தாமரைக்கனி.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications