கவர்னர் விவகாரம்: பாஜகவுக்கு வீரமணி கண்டனம்
சென்னை:
தமிழக முதல்வராக ஜெயலலிதாவை பொறுப்பேற்றுக் கொள்ள அழைத்ததற்காக, கவர்னர் பாத்திமா பீவியைமத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதற்காக பாஜகவுக்கு திராவிடர் கழகம்கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திராவிடக்கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஜனநாயகத்திலும், அரசியலமைப்புச் சட்டங்களிலும் பாஜக உண்மையான பற்று கொண்டிருந்தால் கவர்னரின்செயலை அவர்கள் பாராட்டியிருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு செயற்குழுக் கூட்டத்தில் கவர்னரை மத்தியஅரசு வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியிருப்பது கண்டிக்கத்தக்கது.
பாஜகவின் இந்தத் தீர்மானம் கவர்னருக்கு எதிரான செயல் அல்ல. மக்கள் தீர்ப்புக்கு எதிராக எடுத்த தீர்மானமாகும்என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை பாஜக செயற்குழுக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில், ஊழல் வழக்கில் 2ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்ற ஜெயலலிதாவை கவர்னர் பாத்திமா பீவி முதல்வராகப்பொறுப்பேற்றுக் கொள்ளும்படி அழைத்திருக்கக் கூடாது.
ஜெயலலிதாவை முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொள்ளும்படி, அழைப்பதற்கு முன்பு கவர்னர் யாருடனும்இதுகுறித்து ஆலோசனை நடத்தவில்லை. கவர்னரின் முடிவு ஜனநாயக மற்றும் சட்ட விரோத நடவடிக்கையாகும்.இதனால் கவர்னரை மத்திய அரசு வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதுநினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications