மாவட்டங்களுக்கு தலைவர்கள் பெயர் இல்லை: வீரமணி வரவேற்பு
சென்னை:
தமிழகத்தில் மாவட்டங்கள் மற்றும் போக்குவரத்துக் கழகங்களுக்கு சாதித் தலைவர்கள் பெயரையோ அல்லதுமறைந்த அரசியல் தலைவர்கள் பெயரையோ வைப்பதில்லை என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததற்குதிராவிட கழகப் பொதுச்செயலாளர் வீரமணி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், தமிழகத்தில் ஏற்கனவே மாவட்டங்கள் மற்றும்போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் சாதித்தலைவர்களின் பெயர்கள்வைக்கப்பட்டிருந்தது.
இது கருணாநிதி முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டவுடன் நீக்கப்பட்டது. தற்போது ஜெயலலிதா தமிழகமுதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் மீண்டும் தலைவர்கள் பெயர்களை போக்குவரத்துக் கழகங்களுக்குவைத்து விடுவார்களோ என்ற அச்சம் இருந்தது.
ஆனால் மீண்டும் தலைவர்கள் பெயரை வைக்கும் எண்ணம் இல்லை என்று சட்டசபையில் ஜெயலலிதா அறிவித்துவிட்டார். இது நல்ல முடிவு.
போக்குவரத்துக் கழகங்களுக்கும், மாவட்டங்களுக்கும் தலைவர்கள் பெயரை வைத்தால் இது வேண்டாதசாதிச்சண்டைகளையும், அனைத்து சமுதாய மக்களுக்கும் கசப்பான அனுபவங்களையும் ஏற்படுத்திக் கொடுத்துவிடும் என்பது மறுக்க முடியாத ஒன்று என்று கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications