வீரப்பனை பிடிக்க அதிரடிப்படை புதிய உத்வேகம்
தர்மபுரி:
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள அதிரடிப்படையின் புதிய தலைவராக மீண்டும்நியமிக்கப்பட்டிருக்கும் முன்னாள் டிஜிபி தேவாரம் மற்றும் ஐஜி விஜயகுமார் ஆகியோர் மீண்டும் கூட்டணிசேர்ந்திருப்பதால், அதிரடிப்படை புது உத்வேகத்துடன் செயல்பட ஆரம்பித்துள்ளது.
முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில், வீரப்பன் கூட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மையோரைக் குறைத்த பெருமைதேவாரம்-விஜயகுமார் கூட்டணிக்குச் சேரும். இவர்கள் தற்போது மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளதால் வீரப்பனைப்பிடிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றே அனைவரும் நம்ப ஆரம்பித்துள்ளனர்.
இதனால் வீரப்பன் தரப்பிலிருந்தும் பல்வேறு அதிரடித் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று மலைப்பகுதி மக்கள்பீதி அடைந்துள்ளனர்.
வீரப்பன் பிறந்த கிராமமான கோபிநத்தம் பகுதியில், கடந்த 2 நாட்களுக்கு முன் ஒரு மர்ம கும்பல் வந்து சென்றது.இதனால் இதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் கடும் பீதியில் உள்ளனர். அந்த மர்ம கும்பல் பல இடங்களில்கண்ணிவெடிகளைப் புதைத்திருக்கலாம் என்று அவர்கள் அஞ்சுகின்றனர். இதனால் இவர்கள் காட்டுக்குள்செல்வதைத் தவிர்த்துள்ளனர்.
அதிரடிப்படை மீது இருந்த அதிருப்தி இன்னும் மலைப்பகுதி மக்களிடம் குறையவில்லை. இதை நிவர்த்தி செய்துநல்லுறவை வளர்க்க சிறப்பு கிராம கமிட்டி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வியூகங்களுக்குப் பதிலாக சிறப்புஅணுகுமுறையைக் கிராம மக்களிடம் வளர்த்து அதன் பலனாக வீரப்பன் கும்பலின் மறைவிடங்களைச் சுற்றிவளைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
முக்கியப் போலீஸ் நிலையங்களில் நவீனத் தகவல் தொழில்நுட்ப வசதிகள் அமைக்கும் பிரத்யேக நடவடிக்கையில்உயர் அதிகாரிகள் இறங்கியுள்ளனர். வரும் 21 ஆம் தேதியன்று அமாவாசை என்பதால், வீரப்பன் தரப்பில்தாக்குதல் நடக்கலாம் என்பதால் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.
இந்நிலையில், கண்ணிவெடிகளைக் கண்டறியும் வல்லுநரான டிஐஜி சஞ்சய் அரோராவும்தேவாரம்-விஜயகுமாருடன் கூட்டணி சேரும் நிலை தற்போது உருவாகியுள்ளது. இதுவும் அதிரடிப்படைக்கு மேலும்ஒரு புது உத்வேகத்தைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications