பார்முலா ஒன் சோதனை கார் பந்தயம்- நரேன் தேர்வு
கோவை:
"பார்முலா ஒன் கார்ப் பந்தயத்திற்கான காரை ஓட்டி சோதனை செய்ய முதல் முதலாக இந்தியர் ஒருவர் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். அந்த பெருமையை கோவை கார்ப் பந்தய வீரரும், ஆசிய சேம்பியனுமான நரேன்கார்த்திகேயன் பெறுகிறார்.
சர்வதேச அரங்கில் புகழ் பெற்ற கார்ப் பந்தய வீரர்களில் கோவையைச் சேர்ந்த நரேன் கார்த்திகேயனும் ஒருவர்.அவர் கடந்த முறை நடந்த சர்வதேச சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய கோப்பைக் கார் பந்தயங்களில் பங்கேற்றார்.
இவர் தற்போது ஜப்பானில் நடந்து வரும் நிப்பான் கார்ப் பந்தயத்தில் பங்கேற்றுள்ளார். இந்திய வர்த்தகநிறுவனங்களான சியட், எக்சைடு பேட்டரி மற்றும் சில நிறுவனங்களின் சார்பாகப் பங்கேற்றார். ஆனால்இப்போட்டியில் அவர் முழுமையாக கலந்து கொள்ள முடியாமல் பாதியிலேயே போட்டியிலிருந்து விலகினார்.
இப்போட்டியில் முதல் சுற்றில் 17வது வட்டத்தில் கலந்து கொண்டு முன்னிலை வகித்தார். பின்னர்அடுத்தமுறையில் அவரது கார் திடீரென பழுதானது. 22 சுற்றுப்பாதையில் இருந்த அவரது காரில் இரண்டாவது மற்றும்3வது கியர்கள் செயல் இழந்தன.
இதனால் 22ம் வட்டப்பாதையில் பந்தயக் கார் நிறுத்தி சரி செய்யப்பட்டது. 6.2 வினாடி தாமதத்திற்கு பிறகுபுறப்பட்ட அவரது கார், மீண்டும் பழுதடைந்தது.
32 வது வட்டத்தில் அவரது கார் நுழைந்தபோது வண்டியின் கியர்கள் முற்றிலும் செயலிழந்து விட்டன. இதனால்அவர் போட்டியிலிருந்து பாதியிலேயே விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
சர்வதேச அரங்கில் புகழ் பெற்றுள்ள நரேன் கார்த்திகேயன், தற்போது இங்கிலாந்து நாட்டில் நடக்கும் ஒட்டப்பந்தயக் கார்களைச் சோதனை செய்து பார்க்க அழைக்கப்பட்டுள்ளார்.
பார்முலா ஒன்றிற்கான இந்த டெஸ்ட் டிரைவிற்கு அழைக்கப்படும் முதல் இந்தியர் என்ற பெருமையை அவர்பெறுகிறார். இங்கு ஜகுவார் ரக கார்கள் இடம் பெறுகின்றன. இந்த கார்களை ஓட்ட மிகவும் திறமை வாய்ந்தபந்தயக் கார் வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications