சிட்னியில் சுற்றிய நேபாள இளவரசன்-தேவயானி
சிட்னி:
ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடந்த போது, மறைந்த முன்னாள் நேபாள இளவரசர்திபேந்திரா தனது காதலி தேவயானி ரானாவுடன் சிட்னியில் ரகசியமாக தங்கியிருந்தார் என ஆஸ்திரேலியபத்திரிக்கை ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.
நேபாள இளவரசரான திபேந்திரா கடந்த வெள்ளிக்கிழமை இரவு நேபாள மன்னர் பீரேந்திரா, ராணி ஐஸ்வர்யாஉள்ளிட்ட ராஜ குடும்பத்தைச் சேர்ந்த 13 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு தன்னைத்தானே சுட்டுக் கொண்டார்.
கோமாவில் இருந்த அவர் திங்கள்கிழமை மரணமடைந்தார். அதன் பின் நேபாள மன்னராக ஞானேந்திராபொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
திபேந்திரா மன்னரையும், ராணியையும் கொன்றதற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வந்தன. திபேந்திராவின்காதலியை மணக்க ராணி ஐஸ்வர்யா மறுத்ததும் அவர் ராஜ குடும்பத்தினரை கொன்றதற்கான காரணம் எனகூறப்பட்டது.
எது உண்மையான காரணம் என தெரியாத நிலையில் ஆஸ்திரேலியாவிலிருந்து வெளிவரும் சிட்னி மார்னிங்ஹெரால்ட் என்னும் பத்திரிக்கை, கடந்த ஆண்டு, சிட்னியில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளின் போது திபேந்திராதனது காதலி தேவாயனி ரானாவுடன் சிட்னியில் குவே வெஸ்ட் அபார்ட்மென்ட்சில் தங்கியிருந்தார் என்றபரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளது.
அந்த பத்திரிக்கை செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் போது திபேந்திரா சிட்னிக்கு வந்திருந்தார். அவர்வந்த 2 தினங்களுக்குப் பின் தேவயானி வந்தார்.
தானும், தேவயானியும் தங்கியிருக்கும் விஷயத்தை ரகசியமாக வைத்திருக்குமாறு தனக்கு காவலாக இருந்த 2ஆஸ்திரேலிய போலீசை கேட்டுக் கொண்டார். ஏனென்றால் நேபாள ராணி ஐஸ்வர்யா திபேந்திராவின் இந்தகாதலை எதிர்த்து வந்தார்.
திபேந்திராவும், தேவயானியும் பல இடங்களுக்கு பொருட்கள் வாங்கவும், இயற்கை காட்சிகளை ரசிக்கவும் சேர்ந்துசென்றதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் ஜோடியாக உணவருந்த சென்று வந்தனராம்.
ஆனாலும் இவர்கள் இருவரும் எந்த விதமான அரசு விழாக்களிலும் கலந்து கொள்ளவில்லை.
தேவயானி, திபேந்திராவுடன் சிட்னியில் இருந்தது, ஆஸ்திரேலியாவில் இருந்த நேபாள மக்களுக்கோ அல்லதுஆஸ்திரேலிய அதிகாரிகளுக்கோ தெரியாது. அவர்களுடன் நேபாள ஒலிம்பிக் குழுவின் தலைவர் என்றமுறையில்தான் திபேந்திரா பேசிக் கொண்டிருந்தார் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம், நேபாளத்தில் இருப்பவர்களும், அங்கு செல்லவிரும்புபவர்களும், அங்கு நிலவி வரும் கலவரம் காரணமாக ஏற்படக்கூடிய பாதுகாப்பின்மையை கருத்தில்கொள்ளுமாறு எச்சரித்துள்ளது.
ஆஸ்திரேலியாவிலிருந்து நேபாளம் செல்ல விரும்புவோர்கள் எல்லா நேரமும் தங்கள் பாதுகாப்பில் கவனம்செலுத்த வேண்டும் என ஆஸ்திரேலியாவின் பிராயாண ஆலோசனை அலுவலகம் கூறியுள்ளது.
தீபேந்திரா இறப்பதற்கு முன் வெளிவயிட்டுள்ள செய்தியில், நேபாளத்தில் மன்னர் குடும்பம்கொல்லப்பட்டிருப்பதால் அங்கு உள்நாட்டு குழப்பங்கள் வரும் எனவும் எச்சரித்திருந்தது.
இந்நிலையில் நியூசிலாந்து அரசு, நேபாளத்தில் வாழும் தங்கள் நாட்டு மக்களின் பாதுகாப்புக்குத் தேவையானஅனைத்து முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications